அடுத்த பிரதீப் ரங்கநாதன் ரெடியா?.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ வார நாட்களில் வசூலை வாரி குவிக்குதே!

சென்னை: புதிய படங்களும் சிறு பட்ஜெட் படங்களும் முதல் நாளில் கூட 1 கோடி ரூபாய் வசூலை அள்ளுவதற்கே பெரும் போராட்டமாக உள்ள சூழலில் வார நாட்களிலும் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி வருகிறது வித் லவ் (With Love) திரைப்படம்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் எப்படி மவுத் டாக் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியதோ அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அந்த படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வித் லவ்' திரைப்படம் ஓரளவுக்கு திரையரங்குகளை கடந்த வாரம் முதல் காப்பாற்றி வருகிறது.

Abishan Jeevinth turns next proming Kollywood actor and his With Love Movie Day 6 Box Office is huge
Photo Credit:

சென்னை மற்றும் திருச்சியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அபிஷன் ஜீவிந்த் அடுத்த படத்திலும் ஹீரோவாகவே கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த பிரதீப் ரங்கநாதனும் கோலிவுட்டில் ரெடி என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

வித் லவ் 6 நாள் வசூல்: செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்க மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான 'வித் லவ்' திரைப்படம் முதல் நாளில் 1 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. முதல் 3 நாட்களில் உலகளவில் 11 கோடி வசூலை அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் அள்ளியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகின. இந்நிலையில், 6 நாட்களில் இதுவரை இந்தியாவிலேயே 11.69 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளவில் என்ன வசூல்?: தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் வித் லவ் படத்தை ப்ரியமுடன் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக இதுவரை 17 கோடி முதல் 18 கோடி ரூபாய் வரை உலகளவில் வித் லவ் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், காதலர் தின வாரத்தை காதலர்களும் இளைஞர்களும் இந்த படத்தை பார்த்துக் கொண்டாடி வருவதால் இந்த வாரமும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு ஹீரோ ரெடி: அடுத்த தளபதி விஜய் சிவகார்த்திகேயனா? என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அடுத்த தனுஷ் பிரதீப் ரங்கநாதன் எனக் கூற ஆரம்பித்தனர். சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கும் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், கோலிவுட்டுக்கு அடுத்த பிரதீப் ரங்கநாதன் கிடைத்து விட்டார் என அபிஷன் ஜீவிந்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். ஜி பேயில் 500 ரூபாய் இருக்குமா? என நண்பர்களிடம் கேட்டு வந்த அபிஷன் இன்று 20 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என்கின்றனர். அடுத்த படமும் அவர் ஹீரோவாகத்தான் நடிக்கப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X