அந்த பெருமை என் மனைவி ஐஸ்வர்யா ராயைத்தான் சேரும்.. அபிஷேக் பச்சன் ஓபன் டாக்

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தனது மனைவி குறித்து அபிஷேக் பச்சன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் முழுவதுமாக திரும்பியது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை குறுகிய காலத்திலேயே பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள்.

சல்மானுடன் ரிலேஷன்ஷிப்: கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில் இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பின் நாட்களில் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சல்மானை பிரிந்த அவர் அடுத்ததாக விவேக் ஓபராயை காதலித்தார். அந்தக் காதலும் பாதியிலேயே முடிந்துவிட்டது.

Abishek Bachchan Emotional Talks about His Wife Aishwarya Rai
Photo Credit:

அபிஷேக்குடன் திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

திட்டவட்ட மறுப்பு: இதற்கிடையே அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்தார்கள். அதிலும் ஒரு பேட்டியில் பேசிய அபிஷேக் பச்சன், 'என்னையும் ஐஸ்வர்யா ராயையும் வைத்து இஷ்டத்துக்கு கதை எழுதிக்கொள்கிறார்கள்' என்று பதிலடி கொடுத்தார். அதேபோல் ஐஸ்வர்யா ராயும் தனது செயல்பாடுகள் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.

அபிஷேக் பேட்டி: இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எங்கள் மகள் ஆராத்யாவிடம் உன் தந்தை, என் தந்தை, உன் அம்மா உலக புகழ்பெற்ற நடிகர்கள் என்றெல்லாம் ஒருபோதும் நான் சொன்னதில்லை. ஆனால் அவள் இப்போது வளர்ந்துவிட்டாள். எல்லாவற்றையும் அவள் புரிந்துகொள்வாள் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

பெருமை ஐஸ்வர்யாவுக்குத்தான்: எங்கள் மகள் ஆராத்யா எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. சொல்லப்போனால் அவளிடம் செல்ஃபோனும் இல்லை. இந்த பெருமையெல்லாம் முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராயைத்தான் சேரும். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை. மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம்" என்றார். முன்னதாக மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என ஒரு தகவல் சமீபமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X