சந்தானம் சாதிப்பாரா , சறுக்குவாரா ?

By Shankar

இந்த வருட இறுதியில் வெளியாக உள்ள படங்களில் சந்தானம் நாயகனாக நடித்து நாளை ரீலீஸ் ஆகும் 'சக்கப் போடு போடு ராஜா ' முக்கியமானது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட வெற்றி, காமெடியனாக கல்லா கட்டி வந்த சந்தானத்தை கதாநாயகனாக தொடந்து நடிக்க நம்பிக்கையூட்டியது.

 Acid test for Santhanam

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சந்தானம் கதாநாயகன் வேஷம் கட்டிய படம் சுமாரான வெற்றியை பெற்றது, இனிமே இப்படித்தான் படமும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கோட்டை தொட்டது. காமெடியனாக நடிப்பதில்லை ஒன்லி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ள சந்தானம் நாயகனாக நடித்துள்ள 'சக்கப் போடு போடு ராஜா'வை பவி சாண்டில்யா நாயகியாக நடித்துள்ளார். மற்றும் விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி, வி.டி.வீ.கணேஷ் நடித்துள்ள இப்படத்தை சேதுராமன் இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு, கவனம் முழுவதும் நாளை ரீலீஸ் ஆக உள்ள 'வேலைக்காரன்' படத்தை நோக்கி உள்ள நிலையில் சக்கப் போடு போடு ராஜா வெளியாவது திரையரங்குகள் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தானம் நாயகனாக நடித்து வெளியான எந்த படமும் அவுட் ரேட் முறையில் வியாபாரம் ஆனதில்லை. விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே தான் இரு படங்களும் மினிமம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை. பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களின் ரிலீசுடன் போட்டி போடாமல் தனியாக வந்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக் கோட்டைத் தொட்டது.

சிவகார்த்திகேயன் படத்துடன் நேரடி மோதலில் சக்கப் போடு போடு ராஜா ரீலீஸ் செய்யப்படுவது புத்திசாலிதனமில்லை என்கிறது வியாபார வட்டாரம். 9 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு விநியோக உரிமை வியாபாரம் செய்யப் பட்டுள்ள இப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்தால் அசல் வரும் .

விஐய் தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் பிரபலமாகி திரையுலகில் வாய்ப்பு பெற்று நாயகனாகவும் - காமெடியனாகவும் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன்- சந்தானம் இருவரும் நாயகர்களாக நடித்த படங்கள் நேருக்கு நேர் ரிலீசில் மோதுவது திரையுலகில் ஆச்சர் யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தானம் நாயகனாக பாக்ஸ் ஆபீசில் சாதிப்பாரா - சறுக்குவாரா ? நாளை மாலை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X