நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று... ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
அமெரிக்காவில் ஆடை வடிவமைப்பு குறித்த புதிய பிசினசை துவங்கும் பொருட்டு அவர் அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா என இரண்டிலும் சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

விக்ரம் படம்
படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்
அடுத்தடுத்து வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடனும் கமல் இணைந்து படம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவர் மக்கள் சீநதி மய்யம் மூலம் குரல் கொடுத்து வருகிறார்.

அமெரிக்காவில் புதிய பிசினஸ்
இதனிடையே அமெரிக்காவில் புதிதாக ஆடை வடிவமைப்பு வணிகத்தில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் தெரிவித்திருந்தார். இதற்கென அமெரிக்காவின் சிகாகோவிற்கு அவர் சென்றிருந்தார். தற்போது இந்தியா திரும்பியுள்ள அவருக்கு லேசான இருமல் இருந்ததாகவும் அதையொட்டி பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
மேலும் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரபரப்பான கமல்
தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விக்ரம் படத்தின் சூட்டிங் பாதிக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











