அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. இளைய மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வரும் வேளையில், அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தனது இளைய மகள் அஞ்சனாவின் காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக நடிகர் அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அர்ஜூன் வீட்டில் விசேஷம்: அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் சென்னையில் அர்ஜூன் கட்டிய ஆஞ்சனேயர் கோவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது, தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் குறித்த முக்கியமான தகவலை அர்ஜூன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரை மகள் அஞ்சனா திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் திருமணம் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.

Action King Arjun Daughter Anjana
Photo Credit:

அமெரிக்கா மாப்பிள்ளை: மகள் அஞ்சனா சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக் தயாரிப்பு தொழிலை நடத்தி வருகிறார். விலங்குகளின் தோலை பயன்படுத்தாமல், ஆப்பிள் மற்றும் பைனாப்பிள் போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு பேக்குகள் தயாரித்து வருகிறார். இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்று என மகள் என்னிடம் கூறியபோது உடனே ஒகே என சொல்லிவிட்டேன். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் கனவுகளுக்கும் பெற்றோர் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் என் மகளுக்கு செய்து வருகிறேன்,

பெற்றோரின் கடமை: அதுப்போலத்தான், என் மகள் காதலிக்கிறேன் என்று சொன்னபோது, ஒரு தந்தையாக இயல்பாகவே சில யோசனைகள் வந்தன. ஆனால், அவளுடைய முடிவு சரியானதா என்று யோசித்தேன் பிறகு சம்மதம் தெரிவித்தேன். பெற்றோர்கள் குழந்தைகளின் பின்னால் ஒரு பாறைபோல் உறுதுணையாக நிற்க வேண்டும். அந்தப் பாடத்தை நான் என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று அர்ஜுன் அந்த பேட்டியில் பேசி உள்ளார். அர்ஜுன் வீட்டில் மீண்டும் ஒரு திருமண விழா வரவிருக்கும் தகவல், அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X