லிங்குசாமி படத்தில் தனது காட்சிகளை முடித்த ஆதி.. லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : லிங்குசாமி முதல் முறையாக இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார்.

உப்பண்ணா படப் புகழ் கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடிக்க வில்லனாக நடிக்க நடிகர் ஆதி ஒப்பந்தமாகி இருந்தார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இப்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்க ஆதியின் காட்சிகள் அனைத்தும் முடிவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதன்முறையாக தெலுங்கு படம்

முதன்முறையாக தெலுங்கு படம்

தொடர் வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் லிங்குசாமி இப்போது முதன்முறையாக தெலுங்கில் நேரடி படம் ஒன்றை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கிறது. முன்னணி நடிகர் ராம் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

பல ரொமான்ஸ் காட்சிகள்

பல ரொமான்ஸ் காட்சிகள்

விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை ஆடிய உப்பண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருவதால் ராம் மற்றும் கீர்த்தி சிட்டிக்கு இடையே பல ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளது.

வில்லனாக ஆதி

வில்லனாக ஆதி

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் ஆதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிருகம், அய்யனார், ஈரம், அரவான், யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி இருந்த நடிகர் ஆதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் தொடங்கப்பட்டு முடிவு பெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் நாசர், நடிகை நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Recommended Video

ரொம்ப வருஷம் கழிச்சு Samuthirakani Call பண்ணினார் | Actor Deepak Exclusive | Filmibeat Tamil
காட்சிகள் முற்றிலும் முடிவு பெற்றது

காட்சிகள் முற்றிலும் முடிவு பெற்றது

நடிகர் ராம் பொத்தினேனிக்கு இப்படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதால் அதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போது ஓய்வில் உள்ளார். அதனால் வில்லனாக நடிக்கும் ஆதியின் காட்சிகள் முழு வீச்சில் நடைபெற்று தற்போது முடிவு பெற்றுள்ளது. எனவே ஆதியின் காட்சிகள் முற்றிலும் முடிவு பெற்றதாக படக்குழு இப்பொழுது அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X