'முத்திரை முகாம்' : நடிகர் ஆதி நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை: தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு முகாமை நடிகர் ஆதி நடத்தினார்.
மிருகம், அரவான், கோச்சடையான் படங்களில் நடித்துள்ள ஆதி, லெட்ஸ் பிரிட்ஜ் என்ற தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் சென்னையில் தொடங்கியுள்ளார்.
இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முதல் விழிப்புணர்வு முயற்சி 'முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி' என்ற பெயரில் நடத்தப்பட்டது.
நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடத்தது.
இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் "நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்" என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்று ஒத்துழைத்தனர்.


Click it and Unblock the Notifications












