”காசு பணம் தேவை இல்லை தலைவா”.. வீதியில் சுற்றும் வயதானவருடன் நடிகர் ஆதி செய்யும் செம ரகளை!
சென்னை: நடிகர் ஆதி, வீதியில் செல்லும் வயதான ஒருவருடன் செய்யும் அட்டகாச வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
ஒக்க வி சித்திரம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஆதி.
இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான 'மிருகம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

வெற்றிப் படங்கள்
மிருகம் படமே சிறந்த நடிகர் என்ற பெயரை ஆதிக்கு பெற்றுத் தந்தாலும், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பேய் படமான ஈரம் படம் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அரவாண், வல்லினம், கோச்சாடையான் என பல படங்களில் நடித்து வந்தாலும், மரகத நாணயம் ஆதிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

தெலுங்கில்
அறிமுக படமே தெலுங்கில் தான் என்றாலும், பின்னர் தமிழில் பிசியான ஹீரோவாக வலம் வந்தார் நடிகர் ஆதி. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இங்கு அவருக்கு சரியான மார்க்கெட் அமையாததால், அடிக்கடி தெலுங்கு திரைப்படங்களில் செகண்ட் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் நடிகர் ஆதிக்கு இந்தியளவில் புகழை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
நடு ரோட்டில் செம ரகளை
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் செம ரகளையான வீடியோ ஒன்றை நடிகர் ஆதி வெளியிட்டுள்ளார். அதில், சாலையில் சுற்றி வரும் வயதானவர் ஒருவருடன், நடுரோட்டில் இறங்கி, சண்டை போடுவது போல நடிகர் ஆதியும், அந்த பெரியவரும் செய்யும் சேட்டைகள்.. அப்பப்பா வார்த்தைகளால் சொல்வதை வீட வீடியோவையே பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

காசு பணம் தேவை இல்லை
மேலும், அந்த வீடியோவில், மாஸ்க் அணிந்தபடி, ஆதி செய்வது போலவே செய்து வந்த அந்த வயதானவர் திடீரென நாமும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்று, மாஸ்க் அணியும் இடமெல்லாம் அட்டகாசம். பொல்லாதவன் பாடல் பேக்ரவுண்டில் ஓடிய படி இருக்கும் இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, "காசு பணம் தேவை இல்லை தலைவா.. உன் அன்புக்கு நான் அடிமை" என நடிகர் ஆதி கேப்ஷன் கொடுத்துள்ளது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

வேற லெவல் அண்ணா
நடிகர் ஆதியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் அண்ணா.. சூப்பர் ஆதி, அவருக்கு நீங்க நடிகர் என்பது தெரியுமா? உண்மையிலேயே இந்த உலகில் அன்பு இருந்தா போதும், காசு பணம் எல்லாம் அதற்கு அடுத்து தான் சூப்பரா சொன்னீங்க ஆதி என பலரும் பாராட்டுகளை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். பார்ட்னர், கிளாப் மற்றும் குட் லக் சகி உள்ளிட்ட படங்களில் நடிகர் ஆதி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











