பால் கறக்கப் போய் மாட்டிடம் ஏடாகூடமாக சிக்கிய பிரபல தமிழ் நடிகர்... பால் குடிக்க நினைச்சது குத்தமா!

ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் ஆதி பண்ணை வீட்டில் பால் கறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமந்தாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் குட்லக் சகி திரைப்படத்தில் நடித்து வரும் ஆதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது பண்ணை வீட்டில் மாட்டுக்கு பால் கறந்தவாறு எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சங்கரின் தயாரிப்பில்

சங்கரின் தயாரிப்பில்

ஆறடி உயரம் அசரவைக்கும் கட்டுடல் என பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் நடிகர் ஆதி தமிழ் சினிமாவிற்கு மிருகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில், அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை வென்று வர அடுத்த திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இரண்டாம் கதாநாயகன்

இரண்டாம் கதாநாயகன்

மிருகம் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வர மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற ஆதி அங்கு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இரு மொழிகளில்

இரு மொழிகளில்

மரகதநாணயம் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது மீண்டும் நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஆதி அதே சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் "க்ளாப்" என்ற மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

"குட்லக் சகி" யில் முக்கிய தோற்றத்தில்

ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் "யூ டர்ன்" திரைப்படத்தில் ஆதி நடித்திருக்க இப்பொழுது மீண்டும் முன்னணி கதாநாயகியாக உள்ள கீர்த்தி சுரேஷின் "குட்லக் சகி" யில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

கடைசி உதை

கடைசி உதை

இவ்வாறு தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் அடுத்தடுத்த திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆதி இப்பொழுது பண்ணை வீட்டில் மாட்டில் பால் கறந்து கொண்டு இருக்க திடீரென மாடு காலைத்தூக்கியதும் உஷாராகி பின் வாங்கிவிட்டார். மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதி பதிவிட்டதுடன் " இந்த கடைசி உதை எல்லாவற்றையும் கூறி விடுகிறது" என சிரித்துக் கொண்டு ஜாலியாக பதிவிட்டுள்ள இந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் கவர்ந்து வைரல் ஆகியுள்ளது.

More from Filmibeat

Read more about: aadhi ஆதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X