அப்பாவிற்கு ஷேவிங் செய்து காசு வாங்கிய நடிகர்... நெட்டிசன்ஸ் கிண்டல்!
சென்னை : நடிகர் ஆதி தனது தந்தைக்கு ஷேவிங் செய்துள்ள வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ஷேவிங் செய்துவிட்டு அப்பாவிடம் இருந்து பணமும் வாங்குக்குகிறார். இந்த வீடியோ வேகமாக பரவி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

நிவாரண உதவி
நடிகர் ஆதி the Bridge என்ற அமைப்பின் மூலம் இணைந்து சென்னை முழுக்க ரவுண்டு அடித்து கொரோனா நிவாரண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் ஆதி சினிமாவில் கஷ்டப்படும் நெருங்கிய நண்பர்களூக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.

இணையத்தில் பகிர்வு
லாக் டவுனில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் நிறைய நடிகர்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மாறி மாறி சேவிங் செய்து இணையத்தளத்தில் பதிவிடுவது வாடிக்கை ஆகி விட்டது. சமீபத்தில் காமெடிய நடிகர் சதிஷ், ஹிந்தி நடிகர் அனுப்பம் கேர் போன்றவர்கள் இப்படி பல பதிவுகளை செய்தார்கள்.

பணம்
அதே போல நடிகர் ஆதி தனது தந்தைக்கு ஷேவிங் செய்துள்ள வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஷேவிங் செய்து முடித்துவிட்டு, தனது அப்பாவிடம் காசு கேட்கிறார். அப்பா குறைவான பணத்தை கொடுப்பதால் பேரம் பேசிக்கொண்டே பர்ஸை வாங்கி பணத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் அவர் அப்பாவின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தை காட்டுகிறது.

பயம் போகவில்லை
அரசின் உத்தரவு படி பல மாநிலங்களில் சலூன் கடைகளும் ஸ்பாக்களும் சில கோட்பாடுகளுடன் திறந்து வைக்க பட்டாலும் , மக்களின் மனதில் இன்னும் பயம் போகவில்லை. ஆதலால் நிறைய கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க படுகிறது. ஆதி அப்பாவின் மீது கொள்ளும் அக்கறை பல இளைஞர்கர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாகவும் , பிரபலங்கள் செய்யும் செயல்கள் பல இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிக்கும் படி இருப்பதினால் பல ரகிகர்கள் ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











