அப்படி நான் செய்துவிட்டேன்.. சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்.. அமீர் கான் ஓபன் டாக்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய் அளவில் வசூல் சாதனை செய்தது. இப்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரிடம் பாலிவுட் நடிகர் அமீர் கான் மன்னிப்பு கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு விஜய் அவார்ட்ஸ் விழாவை தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன். அப்போது அவரை கவனித்த தனுஷ் தனது முன்னாள் மனைவி இயக்கி தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் மெரீனா, எழில் இயக்கத்தில் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் எஸ்கே.
அசுர வளர்ச்சி: தொடர்ந்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக குறுகிய காலத்துக்குள்ளாகவே டாப் 10 ஹீரோக்களுக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

100 கோடி க்ளப் எஸ்கே: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட டாக்டர் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது. அடுத்ததாக அவர் நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு ஹிட்டை கொடுத்தன.
அமரன் மெகா ஹிட்: மாவீரன், அயலான், டான், டாக்டர் ஆகிய படங்களைவிடவும் சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவானது. அந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்று 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இப்போது பராசக்தி, மதராஸி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அமீர் கான் பேட்டி: இந்நிலையில் அமீர் கான் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்டஹ் பேட்டி ஒன்றில், "லால் சிங் சத்தா படத்தின் தோல்வியை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட முடிவு செய்தேன். ஆனால் ஒரு தயாரிப்பாளராக தொடருங்கள் என்று இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா கூறினார். நானும் ஒத்துக்கொண்டேன். பின்னர் சிவகார்த்திகேய, ஃபர்ஹான் ஆகியோரிடம் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் ஒத்துகொண்டு தேதிகள் கொடுத்துவிட்டார்கள்.
மன்னிப்பு கேட்டேன்: பிறகு இப்படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் நடந்தது. அப்போதுதான் இதில் ஏன் நாமே நடிக்கக்கூடாது என்று தோன்றியது. பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் பேசினேன். அப்போது அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். முதலில் படத்தில் நடிக்க முடியாதது அவர்களுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. பிறகு என்னுடைய சூழ்நிலையை அவர்கள் புரிந்துகொண்டார்கள்" என்றார். இந்தப் பேட்டி பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











