அதை செஞ்சது நான் இல்ல.. அவரோட வேலையா இருக்கும்.. மாவு பாக்கெட் பணம் குறித்து மனம் திறந்த பிரபல ஹீரோ!
சென்னை: கோதுமை மாவில் பணம் வைத்து கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து நடிகர் ஆமிர் கான் மனம் திறந்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறத்தலால் நாடு முழுக்க வரும் 18 ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். அன்றாட சாப்பாட்டுக்கெ திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆமிர் கான்
இந்நிலையில் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆமிர் கான் குறித்து கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.

ரூ. 15000 பணம்
அதாவது டெல்லியில் கொரோனா நெருக்கடியால் தவித்த மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15000 ரூபாய் பணம் வைத்து கொடுத்ததாக தகவல் பரவியது. இதுதொடர்பாக போட்டோக்களும் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து நடிகர் ஆமீர் கான் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தார்.

ராபின் ஹுட்
இந்நிலையில் இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான டிவிட்டரில், மக்களே.. கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்த அந்த மனிதர் நான் இல்லை. அது முற்றிலும் போலியான ஒரு கதையாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு ராபின் ஹுட் செய்துவிட்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம்.. என பதிவிட்டுள்ளார்

பலரும் லைக்
சினிமாவில் ராபின் ஹுட் கதாப்பாத்திரம் இருப்பவர்களிடம் இருந்து திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக ஹிட்டடித்தது. இந்நிலையில் அதனை சுட்டிக்காட்டும் வகையில் தன்னை பற்றி பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஆமீர் கான். ஆமிர் கானின் இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











