பிறந்தநாளைக் கொண்டாடும் ஆரி... வாழ்த்துக்களால் திணற வைத்த பிரபலங்கள்!

சென்னை : நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனா.

இவர் பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று டைட்டிலை வென்றவர். ஏராளமான ரசிகர்களையும் பெற்றவர்.

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை ஆரி கொண்டாடி வருகிறார்.

நடிகர் ஆரி அர்ஜுனா

நடிகர் ஆரி அர்ஜுனா

நடிகர் ஆரி அர்ஜுனா நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இன்றைய தினமும் இவரது பிறந்தநாளையொட்டி புதிய பட அறிவிப்பு வெளியாகவுள்ளது.

புகழை கொடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி

புகழை கொடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி

முன்னதாக படங்களில் நடித்திருந்தாலும் இவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது பிக் பாஸ்தான். இவர் கடந்த 4வது பிக் பாஸ் சீசனில் பங்கேற்று டைட்டிலை வென்றார் . 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கோப்பையை வென்றார். இதன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

ரெட்டச்சுழி படத்தில் அறிமுகம்

ரெட்டச்சுழி படத்தில் அறிமுகம்

ரெட்டச்சுழி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், கவனத்தை பெற்றது என்னவோ நெடுஞ்சாலை திரைப்படம் மூலம்தான். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர், தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீமணி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.

போலீஸ் அதிகாரியாக ஆரி

போலீஸ் அதிகாரியாக ஆரி

இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இதையொட்டி அவருக்கு நேரிலும் சமூகவலைதளங்கள் மூலமும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவருக்கு சிறப்பான பிரபலத்தை அளித்துள்ள விஜய் டிவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. மேலும் பல திரைத்துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

Aari Arjunan Grand Opening Muscle Zone Gym in Coimbatore | கொரனோ விழிப்புணர்வு
புதுப்பட அறிவிப்பு

புதுப்பட அறிவிப்பு

இன்றைய தினம் இவரது பிறந்தநாளையொட்டி புதுப்பட அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகயுள்ளது. படத்தில் அஞ்சு குரியன் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் ஈரோடு மகேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X