செஞ்சி கோட்டையில் பரபரக்கும் பகவான் ஷூட்டிங்... மழையால் ஏற்பட்ட வெள்ளம்.. மனம் திறந்த ஆரி!

சென்னை: செஞ்சி கோட்டையில் பகவான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ஆரி அதுகுறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். தொடர்ந்து ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார். தற்போது அலேகா, பகவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆரி அர்ஜூனன்.

பிக்பாஸ் சீசன் 4 வின்னர்

பிக்பாஸ் சீசன் 4 வின்னர்

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆரி. இதில் நிதானமாகவும் நேர்மையாகவும் விளையாடினார். ஹவுஸ்மேட்ஸ் பலரும் அவருக்கு எதிராய் இருந்தபோதும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் விளையாடினார்.

பகவான் படத்தில் ஆரி அர்ஜூனன்

பகவான் படத்தில் ஆரி அர்ஜூனன்

இதனால் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார். தற்போது ஆரி நடித்து வரும் பகவான் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆரி அர்ஜுனன் பகவான் என்ற மித்தாலிஜிக்கல் த்ரில்லரில் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக அண்மையில் அரண்மனை போன்ற செட்டில் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சியை படக்குழு படமாக்கியது.

செஞ்சி கோட்டையில் படப்பிடிப்பு

செஞ்சி கோட்டையில் படப்பிடிப்பு

இதனை தொடர்ந்து படக்குழு சமீபத்தில் செஞ்சி கோட்டையில் க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ஆரி. அவர் கூறியிருப்பதாவது, "செஞ்சி கோட்டையில் படப்பிடிப்பு நடத்த தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

கோட்டைக்குள் குகை உள்ளது

கோட்டைக்குள் குகை உள்ளது

கொரோனா பெருந்தொற்று காரணமாக, அவர்கள் எளிதில் அனுமதி வழங்கவில்லை, ஆனால் நாங்கள் காத்திருந்து படப்பிடிப்புக்காக அனுமதி பெற்றோம். ஏனெனில் புராண கதையை உள்ளடக்கியது என்பதால் அந்தக் காட்சியை அங்கு படமாக்குவதில் நாங்கள் தீர்க்கமாக இருந்தோம். கோட்டைக்குள் ஒரு குகை உள்ளது. மழை பெய்யும்போது வெள்ளம் வருகிறது.

தண்ணீரை வெளியேற்றி படப்பிடிப்பு

தண்ணீரை வெளியேற்றி படப்பிடிப்பு

நாங்கள் தரையிறங்கியபோது, ​​அந்த இடம் முழுக்க தண்ணீர் நிரம்பியிருந்தது. நாங்கள் எல்லா நீரையும் வெளியேற்றி, அந்த இடத்தை உலர வைத்து பின்னர் படப்பிடிப்பை நடத்தினோம்" இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காளிங்கன் இயக்கத்தில் பகவான்

காளிங்கன் இயக்கத்தில் பகவான்

அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X