பிக் பாஸின் விளையாட்டு ஆரம்பம்.. சீசன் 4 டைட்டில் வின்னர்.. என்ன சொல்லியிருக்காருனு பாருங்க!
சென்னை : சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இமான் அண்ணாச்சி, யூடியூபர் அபிஷேக் ராஜா, பிரியங்கா, ராஜு ஜெயமோகன், சின்ன பொண்ணு, பாவனி ரெட்டி, ஐக்கி பெர்ரி மற்றும் மாடல் சுருதி பெரியசாமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆர்யா, தற்போது தொடங்கி உள்ள பிக் பாஸ் சீசன் 5 குறித்து ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சலசலப்பு
பிக் பாஸ் சீசன் 5ன் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இமான் அண்ணாச்சி, ஒரு நகைச்சுவை நடிகர் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்று கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடும் சலசலப்பு ஏற்படுகிறது.

கோவப்பட்ட சிபி
நிரூப் ஏன் சிரிக்கிறீங்க என்று சிபி கேட்கிறார். நீங்க சிரித்தது தப்பு என்கிறார் சிபி, இதனால் கடுப்பான நிரூப், இமானிடம், அண்ணா நான் சிரிச்சது தப்பா என்று கேட்கிறார். இதற்கு இமான் சிரிக்கலாமே என்று கூறுகிறார். இதற்கு சிபி எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு கோபத்துடன் இங்கிருந்து செல்கிறார். இதையடுத்து நமீதா மாரிமுத்துவும் வீட்டில் சண்டை ஆரம்பிச்சாச்சு என்று கூறுகிறார்.

விளையாட்டு ஆரம்பம்
இந்த ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, பிக்பாஸின் விளையாட்டு ஆரம்பம் என்று கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2ம் நாளான நேற்று கடந்து வந்த பாதை குறித்து இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணு இரண்டு பேரும் பேசினார்கள்.

கடந்து வந்தபாதை
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2ம் நாளான நேற்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் பேசினர். இதில், இசைவாணி சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அதேபோல சின்னப்பொண்ணு நாட்டுப்புற கலை தான் என்னை வாழவைத்தது என்று தான் கடந்து வந்தபாதை குறித்து பேசினார். இதைடுத்து எஞ்சி இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேச இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











