பிரம்மாண்டமாக உருவாகும் ஆரியின் பகவான் பட பாடல் காட்சி!

சென்னை : நடிகர் ஆரி இப்பொழுது பகவான் என்ற படத்தில் கதாநாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆரி பிக்பாஸில் இருக்கும் பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்பொழுது பாடல் காட்சிகளை எடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறது அந்த வகையில் பகவான் படத்தில் பாடல் பிரம்மாண்டமாக உருவாகிவரும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாதனை படைத்தார்

சாதனை படைத்தார்

மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஆரி. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்று பிக்பாஸில் வரலாறு காணாத அளவிற்கு பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

மித்தாலஜிகல் த்ரில்லர்

மித்தாலஜிகல் த்ரில்லர்

இந்த நிலையில் அலேகா, பகவான் உள்ளிட்ட படங்களில் ஆரி நடித்து வருகிறார். பகவான் திரைப்படத்தை காளிங்கன் என்பவர் இயக்குகிறார். AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கிறார். மித்தாலஜிகல் த்ரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. ஆரி இதில் நீண்ட முடியுடன் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட்

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட்

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்த திரைப்படம் இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற ரங்கஸ்தலம் பட நடிகை பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். எனவே இந்த படத்தில் சண்டைக் காட்சிகளும் மிகவும் ஸ்பெஷலாக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்டமாக பாடல் உருவாகிறது

பிரம்மாண்டமாக பாடல் உருவாகிறது

இந்நிலையில் இப்படத்தில் உருவாகும் பாடல் ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அந்த பாடலுக்கு கலா மாஸ்டர் கோரியோகிராஃபி செய்கிறார். இந்த பாடலுக்கு ஆரி 3 நாட்கள் பிரத்தியேகமாக பயிற்சி எடுத்துக்கொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் படக்குழு பாடல் காட்சி உருவான வீடியோவை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X