முத்தமிட்டு... கட்டியணைத்து... திருமணநாளில் மனைவியை நெகிழ வைத்த ஆரி !

சென்னை : நடிகர் ஆரி அர்ஜுன் , தனது அன்பு மனைவி நெகிழ்ந்து கண்ணீர் விடும் அளவுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை பார்த்து உண்மையில் நீங்க ரொம்ப சூப்பரான ஆளுதான் என்று ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

நெடுஞ்சாலை படத்தில்

நெடுஞ்சாலை படத்தில்

நடிகர் ஆரி அர்ஜூன் 2010ம் ஆண்டு சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலை திரைப்படத்தில் லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

மாயா

மாயா

அஸ்வின் இயக்கத்தில் உருவான மாயா திரைப்படத்தில் நயன்தாராவின் கணவராக நடித்திருத்தார். திகில் திரைப்படமான இப்படம் ஓரளவு இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. இதைத்தொடர்ந்து, உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் பெருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்து, பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டிலை வென்றார்.

நெகிழ்ந்து மனைவி

நெகிழ்ந்து மனைவி

இந்நிலையில், நடிகர் ஆரி, தனது திருமண நாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பீச்சிற்கு அழைத்து சென்று , நண்பர்கள் முன்னிலையில் மோதிரத்தை அவரின் விரலில் அணிவிந்து ,கையில்ஆசை முத்தம் கொடுத்து திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார். ஆரியின் இந்த செயலால் நெகிழ்ந்து போன ஆரியின் மனைவி ஆனந்த கண்ணீரில் நனைந்தார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை பார்த்து பலர் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பல படங்களில்

பல படங்களில்

ஆரி அர்ஜுன் தற்போது,. எல்லாம் மேல இருக்குறவரன் பாத்துப்பான், மௌனவலை, அலேக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X