கிண்டல் பண்றவன் யாரும் சோறு போடமாட்டான்.. 8 வருஷம் சோறு போட்ட விளம்பரம்.. அப்பாஸ்!

சென்னை: காதல் தேசம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து பட படத்தில் நடித்து இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் அப்பாஸ். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக சினிமாவை விட்டு விலகிய அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

கட்டுனா அப்பாசைப்போலே இருப்பவரைத்தான் கட்டுவேன் என ஒரு காலத்தில் கன்னிப்பெண்கள் பலர் தவம் கிடந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் கன்னி ப்பெண்களின் மனதில் இடம்பிடித்து இருந்த அப்பாஸ் மின்னலே, விண்ணுக்கும் மண்ணுக்கும்,பம்பல் கே சம்மந்தம், சுயம்வரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென படவாய்ப்பு குறைந்து போக, குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. தற்போது நடிகர் அப்பாஸ் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தில் முக்கியமான ரோலி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரியா ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில்,லவ்வர் பட நடிகை கவுரி பிரியா ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார்.

Abbas interview
Photo Credit:
யாரும் சோறு போட மாட்டாங்க: பத்து வருடத்திற்கு பின் சினிமாவில் அப்பாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில், அப்பாஸ் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. அதில், ஒரு பாத்ரூம விளம்பரத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேண்டுமா? ஆண்கள் சுத்தம் செய்யக்கூடாதா? சில பேர் ஏன்னிடம் நேரடியாகவே, உங்களுக்கு நடிக்க வேறு விளம்பரமே கிடைக்கவில்லையா? பாத்ரூம் கிளீனிங் விளம்பரத்தில் தான் நடிக்க வேண்டுமா என்று கிண்டல் செய்தார்கள். ஆமாயா சுத்தம் முக்கியம் என்று அவர்களிடம் நான் தில்லாக பதில் அளித்தேன். கிண்டல் செய்பவர்கள் யாரும் சோறு போட மாட்டார்கள். ஆனால், நான் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த நேரத்தில் அந்த விளம்பரத்துக்காக எனக்கு எட்டு வருடம் ஒப்பந்தம் போடப்பட்டு நல்ல சம்பளம் கொடுத்தாங்க. அந்த காசு தான் எனக்கு சோறு போட்டது என அப்பாஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X