அனைத்தையும் விற்றுவிட்டேன்.. அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன்.. தனுஷ் பட நடிகர் கண்ணீர்!

சென்னை: தனுஷ் பட நடிகர் தான் எல்லாவற்றையும் விற்றுவிட்டதால் அம்மா உணவகத்தில்தான் நாள்தோறும் சாப்பிட்டு வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான படம் துள்ளுவதோ இளமை. இந்த படம் இன்று பெரும் பிரபலமாக உள்ள பல நட்சத்திரங்களுக்கு என்ட்ரி கார்டாக இருந்தது.

அதாவது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகை ஷெரின் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்கள்.

 தனுஷின் க்ளாஸ் மேட்

தனுஷின் க்ளாஸ் மேட்

இந்தப் படத்தில் தனுஷின் க்ளாஸ் மேட்டாக நடித்தவர் தான் அபினய். செம ஸ்மார்ட்டாக பல இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்டார் அபினய். இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹீரோவாக நடித்த அபினய்

ஹீரோவாக நடித்த அபினய்

எதிர்பார்த்ததை போலவே தமிழ் மற்றும் மலையாள மொழியில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். தமிழில் ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்தார்.

மீண்டும் சப்போர்ட்டிங் ரோல்

மீண்டும் சப்போர்ட்டிங் ரோல்

இதேபோல் மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்தார். ஆனால் தான் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ஹீரோக்களுக்கு தோழனாக மீண்டும் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க தொடங்கிவிட்டார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

கடைசியாக தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பிஸ்னஸ்மேனாக நடித்தார் அபினய். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை அபினய்.

பெரும் கஷ்டம் நெருக்கடி

பெரும் கஷ்டம் நெருக்கடி

சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் அபினய். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அபினய், தான் பெரும் கஷ்டத்திலும் நிதி நெருக்கடியிலும் சிக்கியுள்ளதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

விளம்பர படங்கள் இல்லை

விளம்பர படங்கள் இல்லை

அதில் ஆக்ஷன் படங்கள் ஒத்துவராது என்ற நிலையில் தான் நடிக்க இருந்த 8 படங்களின் வாய்ப்பு கை நழுவி போனதாக கூறியுள்ளார். விளம்பர படங்களும் போதுமான அளவு கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்துள்ளார் அபினய்.

வறுமையின் பிடியில் அபினய்

வறுமையின் பிடியில் அபினய்

இந்த சூழ்நிலையில் அவரது அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். இதனால் கடுமையான வறுமையில் சிக்கியுள்ளார் அபினய். வறுமையின் பிடியில் இருந்து தப்ப தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறேன்

அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறேன்

வாய்ப்புகள் வருமோ வராதோ என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளையும் கழித்து வரும் அபினய், நாள் தோறும் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட்டு வருவதாக கண்ணீர் விட்டுள்ளார்.

தெரியாமலே போய் விடுகிறது

தெரியாமலே போய் விடுகிறது

நடிகர் அபினய் போலவே பல நடிகர்கள் கடுமையான கஷ்டத்தில் உள்ளனர். பலரின் நிலைமை வெளியே தெரிகிறது. பலரது நிலை வெளியே தெரியாமலே போய்விடுகிறது.

சிகிச்சைக்கு கூட பணமில்லாமல்

சிகிச்சைக்கு கூட பணமில்லாமல்

பல நடிகர்கள் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் மரணித்த தகவலும் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சாலையோரம் வசிக்கும் பல தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அவர்களுக்கு பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்துள்ளனர்.

யாராவது உதவ முன் வருவார்களா?

யாராவது உதவ முன் வருவார்களா?

நடிகர் அபினய்யின் நிலையை பார்த்து சினிமா பிரபலங்கள் யாராவது உதவ முன் வருவார்களா? அபினய்யின் பழைய வாழ்க்கையை வாழ வழி கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு..

More from Filmibeat

Read more about: abinay அபினய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X