பேஸ்புக் லைவில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக..பிரபல நடிகர் கைது..திரையுலகில் திடீர் பரபரப்பு

By

மும்பை: வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா, லம்பா உட்பட சில இந்தி படங்களில் நடித்திருப்பவர் அஜாஸ் கான்.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் தூக்குடு, ராம்சரணின் நாயக், ஜூனியர் என்.டி.ஆரின் டெம்பர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மும்பை பாந்த்ரா

மும்பை பாந்த்ரா

இவர், இந்தி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிகம் பிரபலமானார். டிவி.சீரியலிலும் நடித்துள்ளார். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் தேதியோடு முடிவடையும் என நினைத்து, தங்கள் ஊர்களுக்கு செல்ல, வெளிமாநில தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தனர்.

அஜாஸ் கான்

அஜாஸ் கான்

ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தகவல் வெளியானதால் ஆத்திரமடைந்த அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பேஸ்புக் லைவில் பேசிய நடிகர் அஜாஸ் கான், வெறுப்பைத் தூண்டும் வகையில் சர்ச்சையான கருத்துக்களை கூறினாராம்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதனால் சமூக வலைத்தளங்களில் இதுபற்றி விவாதம் கிளம்பியது. இதையடுத்து அவரை மும்பையில் உள்ள கர் காவல் நிலையத்துக்கு அழைத்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் கைது செய்துள்ளனர். அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கர் காவல் நிலைய ஆய்வாளர் கஜனன் கப்துலே உறுதிப் படுத்தியுள்ளார்.

கடுமையான பிரிவு

கடுமையான பிரிவு

'நடிகர் அஜாஸ் கானை கைது செய்தது உண்மைதான். அவர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெறுப்பைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது' என்று தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டும் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக அஜாஸ் கான் கைது செய்யப்பட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X