Ajith: விஜய் மகனுக்கு போன் செய்த அஜித்.. என்ன பேசினார் தெரியுமா?
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவர் இயக்கும் படத்தை முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ஒப்பந்தத்தில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நடிகர் அஜித், விஜய்யின் மகனிடம் பேசியதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் விஜய், இவர் நடிப்பில் அண்மையில் வெயியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கி கல்லாக் கட்டியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறார்.

இவரின் மகன் சஞ்சய், அப்பாவை போல ஹீரோவாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது தாத்தா எஸ்.ஏ.சந்திர சேகரைப் போல் இயக்குநராக உருவாகி உள்ளார். மேலும், இவருக்கு தந்தையைப் போல் நடிப்பில் ஆர்வம் இல்லை. இவர் அண்மையில் 'புல் தி டிரிக்கர்' என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படம் 'யூடியூப்' தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதாகவும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அப்படத்தின் புரோமோஷன் பணிக்காக படக்குழு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகியுள்ளனர். ஆரம்பத்தில் தயக்கத்துடன் இதுகுறித்து அஜித்திடம் பேசியிருக்கிறார், சுரேஷ் சந்திரா. ஆனால், அஜித்தோ அனுமதியெல்லாம் வேண்டாம் கண்டிப்பாக போய் பண்ணுங்க என்று சொன்னதாக கூறப்படுகிறது.
அஜித் என்ன பேசினார் தெரியுமா: அதுமட்டும் இல்லாமல், தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம், விஜய்யின் மகன் சஞ்சய்யின் தொலைபேசி எண்ணை வாங்கி, தானாக முன் வந்து அவருக்கு போன் செய்து மனதார வாழ்த்துகளைக் கூறியதாகவும் இணையத்தில் ஒரு புது தகவல் பரவி வருகிறது. சஞ்சய்யின் படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, விஜய் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையோ வாழ்த்தையோ தெரிவிக்கவில்லை. சஞ்சய் இயக்குநராவதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என்ற செய்தியும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
சோகத்தில் ரசிகர்கள்: இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால், இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்குகிறது என்ற அறிவிப்பு தான் வெளியாகவே இல்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











