Actor Ajithkumar: சிக்கன் கிரேவி சமைத்த அஜித்.. விடாமல் தொடரும் விடாமுயற்சி சுவாரஸ்யம்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் 42வது படமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது அசர்பைஜானில் நடந்து வருகிறது.
படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார்.
தற்போது படத்தின் இரண்டாவது கட்டமாக மீண்டும் அசர்பைஜானிலேயே சூட்டிங் நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம்வரை அங்கு சூட்டிங் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் லீட் கேரக்டரில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தற்போது இரண்டாவது கட்டமாக அசர்பைஜானில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இதன் சூட்டிங் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு படத்தின் ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்டவை எடுத்து முடிக்கப்பட்டன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ஆஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
அசர்பைஜானில் சூட்டிங்: இதனிடையே சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டுத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அசர்பைஜானிலேயே இரண்டாவது கட்டமாக சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அஜித், அர்ஜூன், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அசர்பைஜானில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்து கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்த காட்சிகள் இரண்டு வாரங்கள் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றனர்.
போட்டோகிராபர் அஜித்: தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளை படமாக்க இயக்குநர் மகிழ்திருமேனி திட்டமிட்டு வருகிறார். இதனிடையே வரும் பிப்ரவரி மாதம் வரையில் அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடரும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் துபாய், சென்னை போன்ற இடங்களிலும் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங்கின் இடையில் நடிகர் அஜித் போட்டோகிராபராக மாறி சக நடிகர்களை படம் எடுத்துவருவது குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
சிக்கன் கிரேவி சமைத்த அஜித்: அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினரை வித்தியாசமான கோணத்தில் அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் தன்னுடைய சமையல் திறமையையும் இந்த சூட்டிங்கில் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த இடைவெளியில் அவர் சிக்கன் கிரேவி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறியுள்ளார். இதன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பன்முகத்திறமை கொண்ட அஜித்: தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவர் படக்குழுவினருக்கு உணவு சமைத்து பரிமாறுவதை வாடிக்கையாக்கி வருவதாகவும் அவரது சமையல் அனைவரையும் கவர்ந்து வாவ் சொல்ல வைத்துள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராகவும் சமையல், போட்டோகிராபி, பைக் ரேசிங் போன்றவற்றிலும் அதீத திறமை கொண்டவராக அஜித் காணப்படுகிறார். மேலும் பைக்கில் உலக பயணத்தையும் திட்டமிட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











