Actor Ajith: குட் பேட் அக்லி படத்தில் இளமை தோற்றத்தில் தோன்றும் அஜித்.. காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அஜித் முடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போகும் சூழலில் வரும் மே மாதம் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜித் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வரலாறு படத்தில் அஜித் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் 3 வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கெட்டப்புகள் குறித்து தெரிந்து கொள்ள அவர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Actor Ajith going to join in Good bad ugly movie in young look it seems

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இருவேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கிய சூழலில் தொடர்ந்து படத்தின் சூட்டிங் தள்ளி போய் வருகிறது. இதனிடைய மே 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணையும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்த படத்தில் அவருடன் நடிகை ஸ்ரீலீலா இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி படம்: ஸ்ரீலீலா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் படத்தில் இணையவுஉள்ள முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் அல்லது மீனா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரலாறு படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் அஜித் 3 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கவுள்ள நிலையில் இதில் ஒரு கெட்டப்பில் அவர் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 கெட்டப்புகளில் அஜித்: மேலும் மற்றொரு கேரக்டரில் வரலாறு படத்தில் தோன்றுவது போல குடுமி வைத்துக்கொண்டு அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எப்போதுமே அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவரை கன்வின்ஸ் செய்து இளமை தோற்றத்தில் நடிக்க வைக்க தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அஜித்தை தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் தற்போது இளமையான தோற்றத்தில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் 10ம் தேதி துவங்கவுள்ள சூழலில் அதில் நார்மலான கெட்டப்பில் தான் நடிகர் அஜித் நடிக்க உள்ளாராம்.

விடாமுயற்சி படம்: தொடர்ந்து சில தினங்கள் கழித்து தன்னை சிறப்பான லுக்கில் மாற்றிக்கொண்டு அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அசர்பைஜானிலேயே நடக்க உள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது படத்திற்காக வேறு லொகேஷன்களை படக்குழுவினர் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் இன்னும் 20 நாட்கள் சூட்டிங் மீதம் உள்ளதாகவும் படத்தை விரைவில் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அடுத்து இந்த படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X