ரேஸிங்.. ஆக்டிங்.. டீச்சிங்.. அடுத்து ஃபையரிங்.. 'தல' யோட புதிய அவதாரத்த பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் தேசிய அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் நடிப்பாலும், திரை தோற்றத்தாலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். இருந்தும் ஒரு சாதாரண மனிதரை போல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கும் அவர் சினிமாவை தாண்டி பல செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.

அதிலும் அவருடைய பைக் மற்றும் கார் ரேஸிங் மீதான அலாதி ப்ரியம் அனைவரும் அறிந்ததே. புகைப்படம் பிடிப்பதிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதையும் அனைவரும் அறிவோம். சமீபத்தில் சிறியரக ஹெலிகாப்டர் தயாரிப்பதில் ஈடுபடவும் செய்தார். அதன் விளைவாக சென்னை எம்.ஐ.டி யில் பயிலும் மாணவர்களுக்கு டெஸ்ட் பைலட் ஆக பாடங்கள் கற்பிக்கவும் செய்தார்.

அந்த வகையில் இப்பொழுது தன்னை துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் அஜித். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் பங்கேற்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா அளவில் உள்ள அனைத்து துப்பாக்கி சுடுதல் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











