வாகா எல்லையில் தேசிய கொடியுடன் தல அஜித்... இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

சென்னை: நடிகர் அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசியக் கொடியுடன் நிற்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

Thala Ajith தான் என் சாவுக்கு காரணம் | Thala Ajith வீட்டின் முன்பு பெண் போராட்டம்

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமாத்துறையில் கோடிகளில் பிஸ்னஸ் கொடுக்கும் அஜித், கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் அஜித்துக்காக சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.

அதிகம் ட்ரென்ட்டானவர்கள்

அதிகம் ட்ரென்ட்டானவர்கள்

அஜித் குறித்து ஏதாவது ஒரு தகவல் கசிந்தால் போதும் சமூக வலைதளங்களில் அதனை ட்ரென்ட்டாக்கி டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் கடந்த சில ஆண்டுகளாக டிவிட்டரில் அதிகம் ட்ரென்ட்டானவர்களின் பட்டியலில் அஜித்தின் பெயர் டாப்பில் இடம் பெற்று வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில்

போனி கபூர் தயாரிப்பில்

நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார் போனி கபூர்.

ஃபேமிலி பேக்டு ஆக்ஷன்

ஃபேமிலி பேக்டு ஆக்ஷன்

வலிமை திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம், ஃபேமிலி பேக்டு ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வட இந்தியாவில் சுற்றுப் பயணம்

வட இந்தியாவில் சுற்றுப் பயணம்

வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது முதல் நடிகர் அஜித், வட மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தாஜ் மகாலின் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

தேசிய கொடியுடன் வாகா எல்லையில்

தேசிய கொடியுடன் வாகா எல்லையில்

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருக்கிறார் நடிகர் அஜித். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் உற்சாகமுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். மேலும் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் அஜித் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X