கொரோனா பாதிப்பு..1கோடியே 32.5 லட்சம் நிதி.. வாரி வழங்கிய அஜித் !
சென்னை :கொரோனா ஏற்படுத்திய பாதிப்புக்காக நடிகர் அஜித் 1 கோடியே 32.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில வாரங்களாக தமிழக ஊடகங்களில் இந்த செய்தி பரவலாக கேட்கப்பட்டு வந்தது அது சிறிய நடிகர்கள் பலர் முன் வந்து சினிமா சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கொடுத்துள்ள நிலையில் முன்னணி நடிகரான தல அஜித் எதுவும் கொடுக்கவில்லையா எப்போதும் போல் மௌனமாக இருக்கிறார் என்று எல்லாம் கேட்கபட்டு வந்தது. அதற்கான சரியான விளக்கத்தை தன் பாணியில் கொடுத்துள்ளார் தல அஜித் .

சினிமா தொழில் கொரோனா காரணமாக முழுவதுமாக பாதிப்படைந்து உள்ளது இதனால் சினிமாவை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு முன் வந்து பலரும் உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் அஜித் தொழிலாளர்களுக்காக ரூபாய் 25 லட்சத்தை கொடுத்துள்ளார் .
பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50லட்சம், பெஃப்சிக்கு 25 லட்சமும், அஜித் பி.ஆர்.ஓ யூனியனுக்கு 2.5லட்சமும் தமிழக ஊடக யூனியனுக்கு 5 லட்சம் நிதி கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக மொத்தம் ஒரு கோடியே 32ரை லட்சம் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்,
நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா ,கார்த்தி ,சிவகார்த்திகேயன் போன்ற பலர் பணம் கொடுத்துள்ள நிலையில் தற்போது தல அஜித்தும் தன்னால் முடிந்த தொகையை கொடுத்து உதவியிருக்கிறார். கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்ற பாரத பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சரும் கேட்டுகொண்டது குறிப்பிடதக்கது. அதற்கு பலர் உதவி செய்து வரும் நிலையில் அஜித்தும் உதவி இருப்பது அவரது ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தியிருக்கிறது .
ஏனென்றால் அஜித் மீது பலரும் பல வருடங்களாக வைத்து வந்த விமர்சனங்கள் தற்போது உடைந்து போய் இருக்கிறது. மேலும் முக்கிய விஷயங்களுக்கு அஜித் கட்டாயம் உதவி செய்வார் என்ற முகத்தையும் காட்டியிருப்பது பலரை ஆச்சரியபடவும் சிலரின் வாயை பிளக்கவும் வைத்துள்ளது.
பலர் இந்த நேரத்திலும் அஜித் கொடுத்துள்ள நிதித்தொகை போதாது ஏன் இவ்வளவு குறைவாக கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கெட்டதை தவிர்த்து அஜித் உதவி விட்டார் என்ற நல்ல விஷயத்தை பகிருமாறு பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அஜித் மேலும் அதிகபடியான உதவிகளையும் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறி வருகின்றனர் .
அஜித் சற்று தாமதமாக உதவியிருந்தாலும் தானாக முன் வந்து அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் என்ற அவரின் எண்ணம் பலரால் பாராட்டபட்டு வருகிறது. அஜித் இதற்கு முன் பல விஷயங்கள் செய்திருந்தாலும் இது ஒரு பேரிடர் காலம் இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுக்கு ஒரே நேரத்தில் உதவியிருப்பது கட்டாயம் பெரிய அளவில் பாராட்டபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications