Ajith Kumar: முதுகு தண்டில் பிரச்சனை.. அப்போலோ மருத்துவமனையில் அஜித் அட்மிட்டாக இதுதான் காரணமா?

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளன. வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டன்ட் செய்யும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கெட் வெல் சூன் அஜித் குமார் ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அந்த போர்ஷன் முடிந்து சென்னைக்கு திரும்பினார்.

Actor Ajith Kumar hospitalized at Chennai Apollo

கடந்த மார்ச் 2ம் தேதி தனது மகன் பிறந்தநாளை முன்னிட்டு கால்பந்து வடிவ கேக்கை எல்லாம் வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை அஜித் குமார் கொண்டாடினார்.

முதுகு தண்டுவட பிரச்சனை: நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்குத் தான் நடிகர் அஜித் குமார் அப்போலா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது முதுகு தண்டுவட பிரச்சனைக்காக நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் குமாருக்கு ஏற்கனவே முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கே மீண்டும் பிரச்சனை ஏற்பட அப்போலோ மருத்துவமனையில் எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேனர் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக் டூர்: உலகம் முழுவதும் நடிகர் அஜித் பைக் டூர் செல்ல வேண்டும் என்கிற தனது கனவை நனவாக்க முதலில் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றீ வந்தார். அதன் பின்னர், துணிவு ஷூட்டிங்கின் போது வெளிநாடுகளுக்கும் பைக் டூர் சென்றார். விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமான நிலையில், தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் நடிகர் அஜித் தனது உடல்நலனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனது லட்சியத்தை அடைய விடாமல் பல மணி நேரம் பைக் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் முதுகு தண்டில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், படக்குழு கடந்த மாதம் சென்னை திரும்பியது. நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என சுரேஷ் சந்திரா கூறியதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படியொரு விஷயம் வெளியாகி அஜித் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகன் பிறந்தநாள்: அஜித் குமார் மகன் ஆத்விக்கின் 9வது பிறந்தநாள் கடந்த மார்ச் 2ம் தேதி நடைபெற்றது. கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை சமீபத்தில் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் Get well soon Ajith Kumar என பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X