Ajith: ஐதராபாத்தில் நடக்கும் குட் பேட் அக்லி பட சூட்டிங்.. சண்டை காட்சிகளுக்கு ரிகர்சல் எடுத்த அஜித்
ஐதராபாத்: நடிகர் அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்ட சூழலில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் தற்போது மே மாதத்திலேயே குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் கட்ட ஷெட்யூலை நிறைவு செய்துவிட்டு அஜித், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்தப் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கில் அதிரடி ஆப்ஷன் காட்சிகளை ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் பத்தாம் தேதி ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டது. இதனிடையே, விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை அவர் நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. இதனால் முன்னதாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளார். இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
3 கேரக்டர்கள்: இதில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேறு வித்தியாசங்களையும் அவர் தன்னுடைய கேரக்டர்களில் காட்டவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மட்டுமில்லாமல் இளம் வயது லுக்கிலும் அஜித் தோன்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்மார்ட் மற்றும் ஸ்லிம் ஆகியுள்ளார் அஜித். இந்நிலையில் இந்தப்படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் ரசிகர்களிடையே பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக கமிட் ஆகியுள்ளதாகவும் ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலீலா நாயகி: படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் இணையுள்ளதாகவும் அவருக்கு தான் ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகைகள் சிம்ரன் அல்லது மீனா இருவரில் ஒருவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முன்னதாக அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு ரிகர்சல்: இதற்கான ரிகர்சலை தற்போது ஐதராபாத்தில் அஜித் மேற்கொண்டு வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார். அனிமல், துணிவு மற்றும் கங்குவா போன்ற படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இணைந்துள்ளார். நடிகர் அஜித் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் ரிகர்சலுடன் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை அவர் நடிக்கவுள்ளதால் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











