லண்டனில் அஜித்.. ரசிகர்களோட சேர்ந்து அஜித் என்ன செஞ்சிருக்காரு தெரியுமா? பார்க்கலாம் வாங்க!
லண்டன் : நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் இணையவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தன்னுடைய சூட்டிங்கிலிருந்து சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரை தல என்று ரசிகர்கள் அழைத்ததும், அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்று அவர் நிராகரித்ததும் தனிக்கதை. அந்த அளவிற்கு பப்ளிசிட்டியை விரும்பாதவராக காணப்படுகிறார் அஜித்.

ஏகே61 படம்
தற்போது அஜித் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். முன்னதாக நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. நேர்கொண்ட பார்வை படம் பாலிவுட்டிலிருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

விறுவிறுப்பான சூட்டிங்
தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான வலிமை படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் குவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோடுகளின் செட் போடப்பட்டு தொடர்ச்சியான சூட்டிங் நடைபெற்று வந்தது.

டிசம்பர் வெளியீடு
இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக முன்னதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் வெளியீடு என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவளியை அஜித் படத்துடன் கொண்டாட அவர்கள் போட்ட திட்டங்கள் தற்போது இல்லாமல் ஆகியுள்ளது.

பிரிட்டனில் சுற்றுப்பயணம்
இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி போனதாலோ என்னவோ தற்போது ஏகே61 படத்தின் சூட்டிங்கிலிருந்து விலகி பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித். கடந்த சில தினங்களில் கார், பைக் என இவரின் லண்டன் பயணத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

ரசிகர்களுடன் புகைப்படம்
இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள ரசிகர்களுடன் இணைந்து அஜித் எடுத்துள்ள அடுத்தடுத்த புகைப்படங்கள் மீண்டும் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் இதுவரை இணையதளத்தில் இருந்த அதே லுக்கில்தான் அஜித் காணப்படுகிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
முன்னதாக விளம்பரங்களை விரும்பாத அஜித் 365 நாட்களும் புகைப்படங்களை ஏன் பதிவிட்டு வருகிறார் என்று பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு தொடர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அஜித் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இரட்டை வேடங்களில் அஜித்
ஏகே61 படத்தில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்து வருகிறார். இதுவரை நடத்தப்பட்ட சூட்டிங்கில் நீண்ட தாடி, காதில் கடுக்கண் என ஒரு கெட்டப்பில் நடித்துள்ள அஜித், அடுத்தக்கட்ட சூட்டிங்கில் மற்றொரு கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











