“என்னா மாமு.. நீ வேற என்னை வாருற..” குட்டிப் பையனா நம்ம தல டிவி சீரியல்ல நடிச்சிருக்காரு தெரியுமா?
அஜித் நடித்த பழைய சீரியலின் வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: நடிகர் அஜித்தின் பழைய சீரியல் வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். படத்தில் அவர் ஒரு காட்சியில் வந்தால் கூட கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளனர். அந்த அளவிற்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
அதற்கு காரணம் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அஜித் அதில் ஒன்றி நடிப்பது தான். மேலும் தன்னிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றவாறு நடிப்பதில் அஜித் வல்லவர்.

இந்நிலையில் அஜித் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அப்படியாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு சீரியல் காட்சி இப்போது வைரலாலியுள்ளது.
அதில் மிகவும் இளவயதாக க்யூட்டாக இருக்கிறார் அஜித். அவர் பேசும் வசனங்களும் சென்னைத் தமிழில் ரசிக்கும்படி உள்ளது. இந்த வீடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











