இந்திக்கு போகும் அஜித் படம்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை : நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் விஸ்வாசம்.
நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டிலும் சிறப்பான மார்க்கெட் காணப்படுகிறது.
அவரது வலிமை படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களை சமூக அக்கறையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் பாலிவுட்டின் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி வெளியானது.

வலிமை படம்
தொடர்ந்து அவர் எச் வினோத் -போனி கபூர் காம்பினேஷனில் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த தீபாவளி ரிலீசாக திட்டமிடப்பட்டு அதிலிருந்து விலகி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் ரிலீசிலிருந்தும் வலிமை படம் பின்வாங்கியது. தற்போது படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் வெளியீடு
இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட்டில் நடித்துள்ள அஜித்குமாருக்கு அங்கும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதையொட்டி தற்போது இந்தப் படம் இந்தியிலும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் ரீமேக்
இந்நிலையில் அஜித், நயன்தாரா, ஜெகபதிபாபு லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2019ல் வெளியான விஸ்வாசம் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனவுக்கு துணைநிற்கும் அஜித்
இந்தப் படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய மகளை பிரிந்து வாழும் அஜித், அவருடைய கனவை அடைவதற்காக அவருக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். படத்தில் ஆக்ஷன், காமெடி என களைகட்டிய நிலையில், இந்தப் படத்தில் அஜித்துக்கு இணையாக இந்தியில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











