Actor Ajith: குட் பேட் அக்லி.. மூன்று வேடங்களில் களமிறங்கும் அஜித்?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்று அறிந்துக் கொள்ள அஜித் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கே இன்னும் நிறைவடையவில்லை. படத்தில் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாகவே இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்திற்கு மைனராக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தரப்பினரும் குறிப்பிட்ட நாளில் அவர் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே, அஜித்தின் ஏகே63 படம் குறித்த அறிவிப்பும் முன்னதாக வெளியான நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Actor Ajith seems to act in triple role in his Good Bad Ugly movie

நடிகர் அஜித்: நடிகர் அஜித் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருகிறார். சாக்லேட் பாயாக தொடங்கியது அவரது பயணம். துருதுருவென இருந்த அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் காணப்பட்டனர். அதையடுத்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் பட்டையை கிளப்பினார் அஜித். அவரை தல என்று ரசிகர்கள் கொண்டாடினர். முன்னணி ஹீரோவாக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் தனக்கென ஒரு விருப்பம், கொள்கை என தன்னுடைய வழி தனி வழியாகவே தொடர்ந்து காணப்படுகிறார் அஜித்.

அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவரது படங்கள் அவரது வயதிற்கு தக்கபடி அமைந்து வருகின்றன. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்கள் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்திற்கு சிறப்பாக அமைந்தன. இதையடுத்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கடந்த மே மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 10 மாதங்களை கடந்த போதிலும் இன்னும் சூட்டிங் நிறைவு பெறாமல் ரசிகர்களுக்கு போக்கு காட்டி வருகிறது படம். கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகளில் சிக்கி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது.

விடாமுயற்சி பட சூட்டிங் தாமதம்: அசர்பைஜானில் காலச்சூழல் ஒத்துழைக்காத சூழலில் படக்குழுவினர் அங்கிருந்து பேக்கப் செய்துவிட்டு சென்னை திரும்பினர். அடுத்தக்கட்ட சூட்டிங் எங்கே நடக்கும் என்பது குறித்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் அசர்பைஜானிலேயே சூட்டிங் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அஜித்திற்கு மைனராக ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த சூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே தன்னுடைய மகனின் பள்ளி விழாவில் அஜித் பங்கேற்று கெத்து காட்டிய நிலையில், இந்த சூட்டிங்கில் அவர் பங்கேற்பார் என்றே கூறப்படுகிறது.

மூன்று வேடங்களில் அஜித்: அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய ஏகே63 படத்தில் நடிக்க அஜித் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதத்தால் இந்தப் படத்தின் சூட்டிங்கும் தள்ளிப் போகிறது. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையாக போடப்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு Good Bad Ugly என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்திற்கு தேவி பிரசாத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே, அஜித்தின் வரலாறு படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் மூன்று வேடங்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X