Actor Ajith: வெளிநாட்டில் அடுத்தடுத்து வீடுகளை வாங்கிப்போடும் அஜித்.. எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அமராவதி, ஆசை உள்ளிட்ட படங்களில் தன்னை சாக்லேட் பாயாக வெளிப்படுத்தி சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்திய அஜித் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளார். அவரது படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக மாறிவருகின்றன. கடந்த ஆண்டில் அவரது துணிவு படம் பொங்கல் ரிலீசாக வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான வசூலையும் குவித்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி டைரக்ஷனில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். கடந்த மே மாதத்தில் இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இறுதியில்தான் படத்தின் சூட்டிங் துவங்கியது. ஆயினும் இந்தப் படத்தை முடிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், அங்கு நிலவிய காலச்சூழல் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்வதில் தடையாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் படத்தின் சூட்டிங் அசர்பைஜானிலேயே அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Ajith seems to bought new house in Dubai Marina


நடிகர் அஜித்: நடிகர் அஜித் கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார். தல என்று கொண்டாடப்பட்ட அவர் இந்த பட்டத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையடுத்து தற்போது அஜித்தாகவே கொண்டாடப்பட்டு வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் அமராவதி, ஆசை உள்ளிட்ட படங்களில் சாக்லேட் பாயாக தன்னுடைய பயணத்தை துவங்கிய அஜித் தொடர்ந்து அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் ஆக்சன் ஹீரோவாக மாறி ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டார். தொடர்ந்து தற்போது தன்னுடைய வயதுக்கு தக்கப்படியான ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்தின் விடாமுயற்சி: அந்த வகையில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களில் சிறப்பாக நடித்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இதில் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய ஏகே63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

குட் பேட் அக்லி படம்: இந்த படத்தின் டைட்டில் நேற்றைய தினம் வெளியானது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர். குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக படம் வெளியாக உள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. முன்னதாக அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கின்போது துபாயில் தன்னுடைய வீட்டில் தங்கியபடி சூட்டிங்கில் பங்கேற்றார் அஜித். அசர்பைஜான் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டபோதும் அவர் சென்னை திரும்பாமல் துபாயில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அவர் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

துபாய் மெரினாவில் வீடு வாங்கிய அஜித்: துபாயின் மிகவும் சிறப்பான இடமா பாம் ஜுமேரா உள்ள நிலையில் அந்த இடத்தில் அஜித்தின் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் துபாயின் துபாய் மெரினா என்ற இடத்தில் அஜித் புதிதாக வீடு வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடம் துபாயின் சொர்க்கமாக கருதப்படும் நிலையில் அடுத்தடுத்து சிறப்பான இடங்களில் அஜித் வீடு வாங்கியுள்ளதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X