கரடு முரடான பாதையில்… தல அஜித்தின் வேறமாறி பைக் ரைடிங் வீடியோ !
சென்னை : கரடு முரடான காட்டுப்பகுதியில் பைக்கில் த்ரில் ரைடிங் சென்றுள்ள தல அஜித்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார்.
தன் நிகரில்லா தனித்துவமான அன்பால் ரசிகர்கள் இவரை அன்போடு 'தல' என்று அழைத்து வருகின்றனர்.

ஏராளமான ரசிகர்கள்
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலும் தலைக்காட்டியது இல்லை, போட்டிகளை விரும்பியதும் இல்லை. இத்தனை வருட சினிமா பயணத்தில் ஒன்றிரண்டு போட்டிகளை மட்டுமே கொடுத்து இருக்கிறார்.
வைரலாகும் புகைப்படம்
அஜித்தை சினிமாவைத் தவிர பொது இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் அறிதான விஷயம் ஆகும். ஆனால் சமீபகாலமான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

வாகா எல்லையில்
பைக் ரைடு பிரியரான அஜித் வடமாநிலங்களில் பைக்கில் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். வாகா எல்லையில் கையில் தேசியக்கொடி ஏந்தியப்படி நின்ற புகைப்படமும்ம அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படும் இணையத்தில் வைரலாகின.

தார் பாலை வனத்தில்
காட்மாண்டு பயணத்தை முடித்துகொண்டு வரும் வழியில் தார் பாலைவனத்தில் பைக்கின் நிழலில் அமர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி பல லைக்குகளை பெற்றது.

மலை உச்சியில்
நேற்று மலையின் பாறையின் நுனியில் ஒத்த ஆளாக நிற்கும் புகைப்படம் வெளியான இந்தபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி ப்பா...மனுஷனுக்கு என்ன தில்லுயா என்று காமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

வேறமாறி பைக் ரைடிங்
தற்போது அஜித் கரடு முரடான பாதையில் அதிவேகத்தில் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தல வேற மாறி வேற மாறி என்று ரிப்பீட் மோடில் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்
சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











