Ajithkumar: வெளிநாட்டில் சூட்டிங்கை முடித்த அஜித்.. தடவிப் பார்த்து கொண்டாட்டம்.. அழகு அள்ளுதே!
சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில மாத இடைவெளிகளில் இந்த இரு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ரிலீசை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு சூட்டிங்கின் இறுதி நாள் ஷூட்டிங்கை நேற்றைய தினம் நிறைவு செய்த அஜித், இன்றைய தினம் ஸ்பெயினில் அவருக்காக உருவாக்கப்பட்டுள்ள ரேஸிங் காரை ட்ரையல் பார்த்துள்ளார். காரின் வடிவமைப்பை பார்த்து அவர் உற்சாகத்துடன் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் சூழலில் அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளிலேயே இரு படங்களும் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் கோடை கொண்டாட்டமாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அறிவித்தபடி குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ரிலீசாகும் குட் பேட் அக்லி: கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் இவன்ட் நிகழ்ச்சியில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர், குட் பேட் அக்லி படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்றைய தினம் பல்கேரியாவில் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலம் இந்தியாவின் மும்பையில் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

உற்சாகத்துடன் தடவிப்பார்த்த அஜித்: இந்நிலையில் நேற்றைய தினம் பல்கேரியாவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த நடிகர் அஜித், தன்னுடைய ரேசிங் பயிற்சிக்காக மீண்டும் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு அவருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரேஸிங் காரை சிறு குழந்தைக்கான உற்சாகத்துடன் அவர் கண்டுக்களித்தார். தொடர்ந்து அதில் உட்கார்ந்து பார்த்தும் உற்சாகமடைந்தார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அஜித்தின் உற்சாகத்தை பார்த்த அவரது ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவிழா கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்: துணிவு படத்தை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ளன. இதையடுதது அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்காக காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டுகளையொட்டி இந்தப்படங்கள் ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் சூழலில் இந்த இரு பண்டிகைகளும் திருவிழாக் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











