Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பெஸ்ட் படங்களை கொடுத்து வருகிறார். அஜித்தை தல என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவற்றில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் தன்னை தல என்று கூப்பிட வேண்டாம் என்றும் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் ரசிகர்களின் மனதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 19ம் தேதி வாக்களிக்க வந்த அஜித்தை தல என்றே ரசிகர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்த அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் நடித்துவரும் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது துணிவு படம். இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்தப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த காரணங்களால் தொடர்ந்து தள்ளிப் போகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கே இந்தப் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இந்த ஆண்டு தீபாவளிக்குதான் ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் துவங்கப்பட்டது.
விடாமுயற்சி படம்: இந்நிலையில அடுத்தடுத்த பிரச்சினைகளால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விரைவில் சூட்டிங் நிறைவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித், ஜூன் மாதத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
அஜித் பிறந்தநாள்: வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் அவரது பிறந்தநாளின்போதுதான் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மற்றும் இயக்குநர் உறுதி செய்யப்பட்டது. ஆயினும் உடனடியாக படத்தின் சூட்டிங் துவங்கப்படாததால் ஒரு ஆண்டிற்கு மேல் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அஜித் பிறந்தநாளில் அடுத்தடுத்து அஜித் ரசிகர்கள் ட்ரிப்பிள் ட்ரீட் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரசிகர்களின் கோரிக்கையாக உள்ள மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்: இதனிடையே, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அன்றைய தினம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இந்தக் கொண்டாட்டத்தை கண்டிப்பாக தவறவிட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெளியாகவுள்ள இந்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்களால் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகமடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











