Ajith: நாளை அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீசாகும் தீனா படம்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அஜித்!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளைய தினம் அவரது ரசிகர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை குறித்து அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே அஜித்தின் தீனா படம் நாளைய தினம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மங்காத்தா மற்றும் பில்லா படங்களும் ரீ ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இவை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே அஜித் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டடித்த தீனா படம் நாளைய தினம் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த படம் ரீ ரிலீசில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் பிறந்தநாள்: நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளைய தினம் சர்வதேச அளவில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாகவே அஜித் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதனிடையே இன்றைய தினம் அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே அஜித் என்ற ஹேஷ்டாக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித் பிறந்தநாளை ஒட்டி அவரது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அவரது தீனா படம் நாளைய தினம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/OAKFC_OFFL/status/1785286082684198973
தீனா ரீ-ரிலீஸ்: அஜித் காதல் நாயகனாக வலம் வந்த சூழலில் அவரது அமர்க்களம், தீனா உள்ளிட்ட படங்கள் அவருக்கு ஆக்ஷன் மற்றும் கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை பெற்று தந்தன. அந்த வகையில் தீனா படம் அவரது கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித். இந்நிலையில் இந்த படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதையொட்டிய பல வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
மே முதல் வாரத்தில் குட் பேட் அக்லி சூட்டிங்: அஜித்தின் விடாமுயற்சி படம் மற்றும் குட் பேட் அக்லி படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டின் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் தள்ளி போய் வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட சூழலில், மே முதல் வாரத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணையவுள்ள குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்த உடன் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் ஜோடி: தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வரும் தீபாவளியையொட்டி இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடத்தப்பட்டு வரும் 2025ம் ஆண்டு துவக்கத்திலேயே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்குப்பட ஹீரோயின் ஸ்ரீலீலா, அஜித்துடன் இணையவுள்ளார். ஆனால் அவர் படத்தில் அஜித்திற்கு ஜோடி இல்லை என்று கூறப்படும் சூழலில், அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் அல்லது மீனா இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் கேரக்டர் கேமியோவாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











