Actor Ajithkumar: விடாமுயற்சி சூட்டிங்கிலிருந்து எஸ்கேப் ஆகும் அஜித்.. அட இதுதான் விஷயமா?

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜானில் உள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கிய இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கியது. இந்த சூட்டிங்கிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா நாடு திரும்பினார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சூட்டிங்கிற்காக அவர் கேரளாவில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜனவரி முதல் வாரத்தில் அவர் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் இணையவுள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் வரும் பிப்ரவரி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்த இரண்டாவது கட்ட சூட்டிங்கில் அஜித், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. முன்னதாக முதல் ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகள், அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஏறக்குறைய அசர்பைஜானிலேயே நிறைவு செய்ய மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார். மேலும் துபாய், சென்னையிலும் சில தினங்கள் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Actor Ajithkumar going to take short break from vidaamuyarchi movie shooting in Azerbaijan

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து அவரது ஏகே62 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த மே மாதத்திலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த இரு மாதங்களாக படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார் அஜித். சமீபத்தில் ரசிகர்களுடன் இணைந்து அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அசர்பைஜான் சூட்டிங்: விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் அசர்பைஜானில் துவங்கப்பட்டு நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியிருந்தனர். சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர்கள் படத்தின் இரண்டாவது ஷெட்யூலிற்காக மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர். இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கடந்த சில தினங்களாக எடுக்கப்பட்ட நிலையில், டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் நடிப்பதற்காக திரிஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.

பிரேக் எடுக்கும் அஜித்: இந்நிலையில் வரும் 31ம் தேதி படத்தின் சூட்டிங்கிலிருந்து சிறிது கேப் எடுத்துக் கொள்ளவுள்ள நடிகர் அஜித், லண்டன் செல்லவுள்ளார். அங்கு தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடவுள்ள அஜித், தொடர்ந்து வரும் ஜனவரி 3ம் தேதி தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். இதையடுத்து சில தினங்களில் அவர் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் இணையவுள்ளார். இதனிடையே டொவினோ தாமஸ் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ள நடிகை திரிஷாவும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் -ஆதிக் கூட்டணி: அஜித் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது அடுத்தப்படமான விடாமுயற்சி படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தப்படத்திலும் அஜித்குமார் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், ஆதிக் -அஜித் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X