Ajith: விடாமுயற்சி படத்திற்காக 10 கிலோ வரை உடல் எடையை குறைத்த அஜித்.. ஸ்மார்ட் லுக்கிங்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அசர்பைஜானில் முதல் கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Actor Ajith lose his weight for Vidaamuyarchi movie around 10 Kgs

அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக விடாமுயற்சி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்தப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடத்தப்பட்டது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர். அங்கு கார் சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டன. படத்தின் 90 சதவிகித சூட்டிங் அங்கு திட்டமிடப்பட்டது.

சென்னை திரும்பிய அஜித்: இந்நிலையில் கடந்த வாரத்தில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் டிசம்பர் 2வது வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன. முன்னதாக துபாயில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் நடக்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சென்னையில் இன்னும் சில தினங்களில் சூட்டிங் நடக்கவுள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் துபாயில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடை குறைத்த அஜித்: இந்தப் படத்திற்காக குண்டாக இருந்த தன்னுடைய உடல்வாகை தற்போது அதிரடியாக குறைத்துள்ளார் அஜித். சமீபமாக தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து அவர் எடுத்துவரும் புகைப்படங்கள் மற்றும் சென்னை திரும்பியபோது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போன்றவை சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களில் இருந்ததை போல இல்லாமல் இந்தப் புகைப்படங்களில் அஜித் எடை குறைத்து காணப்படுகிறார்.

10 கிலோ எடை குறைப்பு: அவர் தன்னுடைய உடல் எடையை தீவிர பயிற்சியின்மூலம் 10 கிலோ வரை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தில் அவரை மிகவும் இளமையாக பார்க்க ரசிகர்கள் தற்போது வெயிட்டிங்கில் உள்ளனர். அடுத்தடுத்து விரைவாக படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்: மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு, அடுத்தடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அஜித் இணையவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள நிலையில், விரைவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளில் ஆதிக் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X