Ajithkumar: ரியல் லைஃப் ஹீரோ! மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்குமார்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி சுடுதல், புகைப்படங்கள் எடுத்தல், சிறிய ரக விமானங்களை ஓட்டுதல் உள்ளிட்டவை அஜித்தின் ஹாபிகளில் ஒன்றாக இருக்கின்றது. இதுமட்டும் இல்லாமல் பைக்கில் உலகைச் சுற்றுவதும் சமையலில் அதிக ஆர்வம் காட்டுவதும் அவரது ஹாபிகளில் இருக்கின்றது. இப்படியான நிலையில், பல வருடங்களாக கார் ரேஸ் பந்தையங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் அஜித்குமார் தற்போது, மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவலை நடிகர் ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது என கூறப்படுகின்றது. குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.
234 கி.மீ வேகம்: இதையடுத்து, அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். அதேநேரத்தில் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோ தமிழ் நாட்டிலே அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலோ எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

உலலநாடுகள்: அதேபோல் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு முன்னர் தனது பி.எம். டபள்யூ பைக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தியாவின் லடாக் தொடங்கி தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுகளுக்கு பயண்ப்பட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் கூட வெளிவந்தது. குறிப்பாக, லடாக்கில், நடிகர் அஜித்தைப் பார்த்த தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள், உங்களைத்தான் தேடீட்டு இருந்தோம் எனக் கூற, அதற்கு அஜித் உடனே, என்னை தேடுனீங்களா? நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா என கிண்டலாக பதில் அளித்தார். இந்த வீடியோவை எடுத்தவர்களும் தமிழ்நாட்டில் இருந்து லடாக்கிற்கு பைக்கில் சென்றவர்கள்தான்.
மீண்டும் பந்தயம்: இப்படியான நிலையில், நடிகர் ஜான் கொக்கென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் அஜித்குமார் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளார். அவர் 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்து , ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஸ்பான்சர்களும் அவர் ஸ்பான்சர் செய்வதில் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் உள்ளனர். இந்த செய்தியால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்களும் உற்சாகம் அடைவீர்கள் என நினைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ஜான் கொக்கென்னின் இந்தப் பதவு அஜித் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











