விடாமுயற்சி சூட்டிங்கிற்கு போகலயா? மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடும் அஜித்குமார்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் நடிக்கும் நேரம் போக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டக்கூடிய நபராக இருந்து வருகின்றார். தற்போது அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி இந்த ஆண்டு வெளியாகும் எனவும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு வெளியாகும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. பொதுவாகவே ஒரு படத்தில் நடித்து, டப்பிங் பணிகளை முடித்த பின்னர் அடுத்த படத்தில் கமிட்டாகும் பழக்கத்தை பல வருடங்களாக பின் பற்றி வருபவர் நடிகர் அஜித்குமார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே அஜித் கமிட்டான படம் குட் பேட் அக்லி. படத்தில் கமிட்டானது மட்டும் இல்லாமல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

Ajithkumar Vidaamuyarchi Good Bad Ugly

மேலும் குட் பேட் அக்லி படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் விடாமுயற்சி படத்தில் நடித்த கார் சேஸிங் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அஜர்பைஜானில் நடைபெற்ற படப்பிடிப்பு, ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்தது.

கோபத்தில் அஜித்: குறிப்பாக அஜித்துக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே பணம் விசயத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும், லைகா நிறுவனம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை வெளியிடுவதில்தான் அதிக அக்கறை காட்டியதாகவும் இது அஜித்துக்கு கோபத்தை உண்டாக்கியது எனவும் தகவல்கள் வந்தது. லைகா தரப்பில் அஜித் கூறியதால்தான் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது லைகா நிறுவனம் பணப் பிரச்னையில் இருக்கின்றது. அஜித்தை சம்பளத்தை குறைக்கச் சொல்லுங்கள் எனவும் கேட்டதாகவும் இதுவும் அஜித்தை கோபப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இயக்குநருடன் கருத்து வேறுபாடு: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. அது, அஜித்திற்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையே படம் தொடங்கிய நாட்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப்பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்கள் கூறியதாகவும், ஒரு சில காட்சிகளில் அஜித்தின் நடிப்பில் திருப்தி இல்லாதபோது, மகிழ் திருமேனி மாற்றுக்கருத்து கூறியதாகவும் இது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்த மாதம் 20ஆம் தேதியில் இருந்து அதாவது நாளையில் இருந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கவுள்ளது என கூறப்பட்டது. இதற்கான படக்குழு ஏற்கனவே சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஏற்கனவே அஜர்பைஜானில் அவுட்டோரில் எடுக்க வேண்டிய காட்சிகளை மட்டும் அங்கு எடுத்துவிட்டு மீதி காட்சிகளை சென்னையில் செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என அஜித் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

கிரிக்கெட் விளையாடும் அஜித்: இந்நிலையில் அஜித் குமார் தனது மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். வெளியாகியுள்ள புகைப்படங்களில் அஜித் குமார் பேட்டிங் செய்வதை போலவும் அவரது மகன் ஆத்விக் பந்து வீசுவதை போலவும் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்க லைக்குகளை அவரது ரசிகர்கள் தட்டி விட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் விடாமுயற்சி படப்பிடிப்புக்குச் செல்லாமல் அஜித் தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடி வருகின்றார் எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X