Ajithkumar: துபாயில் பயிற்சி.. சென்னை திரும்பிய அஜித்.. விமான நிலையத்தில் ரசிகர்கள் செய்த விஷயம்!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவற்றில் விடாமுயற்சி பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. படத்தின் டீசரும் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களிலேயே கோடை கொண்டாட்டமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளதாக அடுத்த ஆண்டு அஜித்தின் ஆண்டாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ajithkumar vidaamuyarchi movie good bad ugly movie

நடிகர் அஜித் குமார்: நடிகர் அஜித் குமார் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களிலுமே சில பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை வெளிநாட்டில் நிறைவு செய்துள்ளார் அஜித்குமார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் சில பேட்ச் வேலைகள் மற்றும் ஒரு பாடல் காட்சிக்கான சூட்டிங் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

துபாயில் ரேஸிங் பயிற்சி: ஒரு வார காலம் இந்த சூட்டிங் அடுத்தடுத்து தாய்லாந்து, பாங்காக் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் வேலைகளை அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இதனிடையே விரைவில் இந்த படத்தின் பேட்ச் வேலைகளுக்கான ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளார். கடந்த சில தினங்களாக துபாயில் தன்னுடைய கார் ரேஸிங்கிற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் அஜித்குமார்.

சென்னை திரும்பிய அஜித்: அவரது புதிய ரேஸிங் காரையும் சமீபத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த பயிற்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அதிகாலையில் சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகினர். அடுத்தடுத்து அவரை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனிடையே அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக மீண்டும் அவர் தாய்லாந்து புறப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித்தின் அடுத்தப்படம்?: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை முடித்துவிட்டு அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைய பேச்சு வார்த்தைகளில் அஜித் குமார் ஈடுபட்டுள்ளார். இந்த இரு படங்களும் ரிலீசானவுடன் அவரது அடுத்த பட அறிவிப்பு குறித்து அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில் அஜித் இணையவுள்ளதாகவும் இந்தப் படம் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X