பத்ரிநாத்தில் அஜித் சாமி தரிசனம்.. படத்தோட டைட்டில் எப்ப சார் வரும்.. ரசிகர்கள் கோரிக்கை!

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஏகே61 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பாங்காக் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் சூட்டிங் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இடையில் கிடைக்கும் கேப்பில் நடிகர் அஜித் பிரிட்டனுக்கு சென்றார். தற்போது பத்ரிநாத்தில் உள்ளார்.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் ரிலீசான நிலையில், இந்த மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஐதராபாத் சூட்டிங்

ஐதராபாத் சூட்டிங்

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கப்பட்டு பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக இந்த முதல்கட்ட சூட்டிங் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது.

 பிரிட்டனில் சுற்றுலா

பிரிட்டனில் சுற்றுலா

இதையடுத்து நடிகர் அஜித், பிரிட்டனுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்கு சில நாட்கள் இருந்த அவர், தனது விருப்பத்திற்குரிய பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. மேலும் அங்கு ரசிகர்களுடன் இணைந்து அதிகமான செல்பி எடுத்துக் கொண்டார் அஜித்.

பாங்காக் செல்லும் ஏகே61 படக்குழு

பாங்காக் செல்லும் ஏகே61 படக்குழு

இதையடுத்து மீண்டும் விசாகப்பட்டினத்தில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. முன்னதாக பூனாவில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக பாங்காக்கில் சூட்டிங்கை நடத்த ஹெச் வினோத் திட்டமிட்டுள்ளார். அங்கு 3 வாரங்கள் இந்த சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் இரட்டை வேடம்

அஜித் இரட்டை வேடம்

பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் அஜித், ஹீரோ, வில்லன் என்று இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கேரக்டர் நீண்ட தாடி, காதில் கடுக்கண் மற்றும் கூலர்ஸ் சகிதம் காணப்படுகிறது. இரண்டாவது கெட்டப்பை படக்குழு ரகசியமாகவே வைத்துள்ளது.

பத்ரிநாத்தில் அஜித் சாமி தரிசனம்

பத்ரிநாத்தில் அஜித் சாமி தரிசனம்

இதனிடையே தற்போது லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கும் பைக் சாகச பயணங்களை மேற்கொண்டு வருகிறார் அஜித். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள புத்தர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், தற்போது பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீசாகுமா ஏகே61?

பொங்கலுக்கு ரிலீசாகுமா ஏகே61?

ஏகே 61 படம் முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் ஏகே61?

நிதி நெருக்கடியில் ஏகே61?

ஆனால் நிதி நெருக்கடி காரணமாக ஏகே 61 படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதால், குறிப்பிட்டபடி பொங்கலுக்காவது ரிலீசாகுமா என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். மேலும் படத்தின் டைட்டிலையாவது வெளியிடுமாறு போனி கபூருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X