Actor Ajith: மகனின் பள்ளி விழாவில் பங்கேற்ற அஜித்.. ஷாலினியுடன் கூல் பேச்சு!
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை முடிக்க படக்குழுவினரின் விடாமுயற்சி மிக அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய மகிழ் திருமேனி பல்வேறு கட்டங்களில் முயற்சிகளை மேற்கொண்டு சூட்டிங்கை நடத்தி வருகிறார். அசர்பைஜானில் துவங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது.
மார்ச் மாதத்திலேயே இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாதம் 15ம் தேதி அசர்பைஜானிலேயே மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் அஜித் இன்னும் சில தினங்களில் அசர் பைஜான் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அஜித்திற்கு அப்போலோ மருத்துவமனையில் மைனர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து ஓரு ஆண்டை கடந்த நிலையிலும் அவரது அடுத்தப்படம் ரிலீசாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிகமான ஏமாற்றத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளையொட்டியே அவரது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மற்றும் படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியானது.
விடாமுயற்சி படம்: படம் அறிவிக்கப்பட்ட போதிலும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போனது. கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டது. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்த நிலையில் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அங்கு காலச்சூழல் ஒத்துழைக்காததால் சூட்டிங்கை தொடர முடியாத சூழல் ஏற்பட்டு, அங்கிருந்து சூட்டிங்கை பேக்கப் செய்துக் கொண்டு படக்குழுவினர் வெளியேறினர்.
அஜித்திற்கு மைனர் ஆபரேஷன்: தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கை மற்ற இடங்களில் மகிழ்திருமேனி திட்டமிட்டார். ஆனாலும் த்ரிஷா உள்ளிட்ட நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினையானதால் தொடர்ந்து சூட்டிங் தள்ளிப் போனது. இதனிடையே வரும் 15ம் தேதி மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அஜித், திரிஷா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்ற அஜித்திற்கு காதிற்கு கீழே நரம்பு ஒன்று வீக்கமாக இருப்பது கண்டறியப்பட்டு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மகன் பள்ளிக்கு விசிட் அடித்த அஜித்: இந்த விஷயம் காட்டுத்தீயென பரவிய நிலையில், அவரு விரைவில் உடல்நலம் தேற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வேண்டுதல்களை தெரிவித்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இன்று அதிகாலை அஜித் வீடு திரும்பினார். இந்நிலையில் தன்னுடைய மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித், அவரது கால்பந்தாட்டத்தை பார்வையாளராக இருந்து ரசித்துள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மேலும் சக நண்பர்கள் மற்றும் ஷாலினியுடன் கேஷுவலாக பேசும் அஜித்தையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











