இருங்க பாய்.. ஒயிஃப் கிட்ட பொய்யே சொல்லாதே.. ஸ்லிம் லுக்கில் திரிஷாவுடன் செம டான்ஸ் போட்ட அஜித்!

சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சில மாத இடைவெளிகளிலேயே அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படமும் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு அஜித் ஆண்டாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ajithkumar vidaamuyarchi movie first single

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியான நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அடுத்த படமான விடாமுயற்சி வரும் பொங்கலையொட்டி ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக தாய்லாந்து சென்ற படக்குழுவினர், அங்கு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நடத்தினர். இதன் புகைப்படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்லிம் லுக்கில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் மிகச் சிறப்பான அழகான தோற்றத்துடன் காணப்படுகிறார்.

பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: அவரது இந்த லுக் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்களும் இந்த படத்தின் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பகல் ஒரு மணி அளவில் இந்த சிங்கிள் வெளியாகும் என்று முன்னதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஒரு மணி அளவில் இந்த பாடலின் ஆடியோ மட்டுமே வெளியாகியிருந்தது.

சூப்பர் ஆட்டம் போட்டுள்ள அஜித்: இந்நிலையில் தற்போது இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் திரிஷாவுடன் இணைந்து அஜித்குமார் சூப்பரான ஆட்டம் போட்டுள்ளார். அனிருத் இசையில் இந்த பாடல் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஆண்டு இறுதியில் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இத்தகைய எனர்ஜியுடன் அஜித் குமாரை பார்ப்பது ரசிகர்களை அதிகமாக இம்ப்ரஸ் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து ரிலீசானாலும் விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

பார்ட்டி கொண்டாட்டம்: மனைவியின் பேச்சை கேட்டு நடந்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதாக இந்தப் பாடலின் வரிகள் காணப்படுகின்றன. அறிவு இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ள நிலையில் அனிருத் மற்றும் ஆண்டனி தாஸ் இணைந்து இந்தப் பாடலை கொண்டாட்ட மனநிலையில் பாடியுள்ளனர். அஜித், திரிஷா மட்டுமில்லாமல் அனிருத் ஆண்டனி தாசும் இந்தப் பாடலில் ஆட்டம் போட்டுள்ளனர். பார்ட்டி கொண்டாட்டமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X