Actor Ajith: ஒரு வேளை அதுவாக இருக்குமோ.. நாளை வெளியாகிறதா அஜித்தின் ஏகே63 அப்டேட்?

சென்னை: நடிகர் அஜித் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் சூட்டின் துவங்கப்பட்டு இன்னும் நிறைவுறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது ஏகே63 படத்தில் ஜாயினாக இருக்கிறார் அஜித். பிப்ரவரி மாதத்திலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இம்மாத இறுதியில் தான் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துனிசியாவில் துவங்க உள்ளது.

கடந்த ஆண்டு அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் வெளியானது. பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியான நிலையில், தற்போது ஒரு ஆண்டை கடந்த நிலையிலும் அடுத்தப்படம் இன்னும் சூட்டிங் அளவிலேயே உள்ளது. விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், விஜய்யின் அடுத்தப்படம் லியோ வெளியாகி, தற்போது அவரது அடுத்தப்படமான The greatest of all time படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படமான விடாமுயற்சியின் ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

https://tamil.goodreturns.in/news/auto-taxi-rapido-launches-saas-model-for-auto-services-with-just-29-rupees-per-day-041423.html

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் திரையுலக வாழ்க்கை அனைத்து தரப்பினருக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் 30 ஆண்டுகளை கடந்து நாயகனாகவே சாதித்து வருகிறார் அஜித். அவரது சினிமா பயணம் சாக்லேட் பாய் கேரக்டர்களில் துவங்கி அமர்க்களம் உள்ளிட்ட அதிரடி படமாக உருமாறியது. தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் சமூக அக்கறையையும் சேர்த்து படங்களை கொடுத்து வருகிறார் அஜித். இவரது நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் சமூக அக்கறையுடன் வெளிவந்தன. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

துணிவு படம்: முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவரது துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியானது. இந்த படத்தில் இவருடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அஜித் கூட்டணியில் மூன்றாவது படமாக இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. படத்தின் விமர்சனமும் வசூலும் அஜித் ரசிகர்களை கொண்டாட செய்தன, இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக தனது ஏகே 62 படத்தின் அறிவிப்பை மேற்கொண்டு தீபாவளி பண்டிகையொட்டியே படத்தை அஜித் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான வேலைகளும் துவங்கப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த விஷயங்கள் சொதப்பவே விடாமுயற்சி படத்தின் அறிவிப்பே கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டிதான் வெளியானது,

இயக்குநர் மகிழ் திருமேனி: படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. லைகா தயாரிப்பில் இந்த படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங்கிலும் தாமதம் ஏற்பட்டது, கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் துவங்கப்பட்ட இந்த ஷூட்டிங் அங்கேயே ஒட்டுமொத்த படபிடிப்பையும் நிறைவு செய்யும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அசர்பைஜானில் நிலவி வந்த காலச்சூழல் படத்தின் சூட்டிங்கை தொடர தடையாக இருந்த நிலையில் அங்கிருந்து ஷூட்டிங்கை பேக்கப் செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளது பட குழு.

துனிசியாவில் சூட்டிங்: அஜித் நேரடியாக துபாய் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துவங்க உள்ளதாகவும் துனிசியாவில் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜார்ஜியா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு பேக்கப் செய்யப்பட உள்ளது. இந்த படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தாமதத்தால் ரிலீஸ் என்று தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை அறிவிப்பு?: இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய ஏகே 63 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் அஜித். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் இந்த படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு காலை 9 மணி அளவில் வெளியாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் அது அஜித் படத்தின் அப்டேட் இல்லை, அந்த நிறுவனத்தின் தெலுங்குப்பட அப்டேட் என்றும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் நாளை தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X