Ajithkumar: இளம் ரசிகர் கொடுத்த பரிசு.. அசர்பைஜான் சூட்டிங்கில் அஜித் நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நிறைவு செய்த அஜித்குமார். தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்தார்

இந்நிலையில் நேற்றைய தினம் விடாமுயற்சி படத்தின் அசர்பைஜான் ஷூட்டிங் நிறைவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து அடுத்ததாக எட்டு முதல் பத்து நாட்கள் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Ajithkumar Vidaamuyarchi tamil cinema

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நிறைவு செய்தார். இதையடுத்து கடந்த மாதம் 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்தார் அஜித். தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


இந்த ஆண்டிலேயே ரிலீஸ்: இதையடுத்து சென்னை திரும்பும் படக்குழுவினர் தொடர்ந்து எட்டு முதல் பத்து நாட்கள் ஹைதராபாத்தில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் 70% நிறைவடைந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டிலேயே திரையரங்குகளில் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி ரிலீசாக விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தள்ளி போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்திற்கு ரசிகர் கொடுத்த பரிசு: படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில தினங்களிலேயே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை விடாமுயற்சி டீம் குஷிப்படுத்தியுள்ள நிலையில், படத்தை இந்த ஆண்டிலேயே வெளியிட ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அசர்பைஜானில் விடாமுயற்சி சூட்டிங்கில் பங்கேற்றிருந்த அஜித்திற்கு அந்நாட்டை சேர்ந்த இளம் ரசிகர் ஒருவர் அஜித்தின் புகைப்படத்தை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.


குட் பேட் அக்லி பட சூட்டிங்: இந்த பரிசால் நெகிழ்ச்சியடைந்துள்ள அஜித், அந்த ரசிகருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ள நிலையில், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளார். இதன் சூட்டிங் மீண்டும் ஹைதராபாத்தில் சில தினங்கள் நடக்க உள்ள நிலையில் அடுத்ததாக பட குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர். முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அங்கு சூட்டிங் நடப்பதற்கான கால சூழல் அடுத்த மூன்று மாதங்களுக்கு இல்லை என்பதால் தங்களின் பிளானை குட் பேட் அக்லி படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X