Ajithkumar: சூட்டிங் துவங்கும் முன்பே விற்றுத் தீர்ந்த குட் பேட் அக்லி ஓவர்சீஸ் ரைட்ஸ்.. அஜித் மாஸ்!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட சூழலில் படத்தின் 70 சதவிகித சூட்டிங் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்ட சூழலில் அங்கேயே ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய படக்குழுவினர் முன்னதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கான காலச் சூழல் ஒத்துழைக்காத சூழலில் சூட்டிங்கை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
இந்நிலையில் மீண்டும் அசர்பைஜானிலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை துவங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்ட அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கை முன்னதாகவே துவங்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மே மாதம் 10ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்து தள்ளி போய் வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்ட சூழலில் ஷூட்டிங் மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை முன்னதாகவே அதாவது மே மாதம் 10ம் தேதியே துவங்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
முன்னதாகவே சூட்டிங்: இந்த படத்தின் ஷூட்டிங் முன்னதாக ஜூன் மாதத்தில் துவங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் இந்த படத்தை முன்னதாகவே துவங்கலாம் என்று அஜித் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ளது குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலா இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக இல்லாமல் படத்தில் இணைய உள்ள மற்றொரு ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஜோடி?: அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த படத்தின் சூட்டின் துவங்குவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்துவரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், 22 கோடி ரூபாய்க்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய மார்க்கெட் காணப்படும் சூழலில் அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றுள்ளது பெரிய விஷயம் இல்லை என்று கோலிவுட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அஜித் படத்தின் வெளிநாட்டு உரிமை: இதேபோல நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் மற்ற உரிமைகளை தயாரிப்பு தரப்பு முன்னதாகவே வியாபாரம் செய்ய முயன்றதாகவும் இதில் கடுப்பான விஜய், அந்த தயாரிப்பு தரப்பையே மாற்றியதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பு தரப்பின் வேலைகளில் தலையிடாமல் அஜித் நடந்துக் கொண்டு வருவது தயாரிப்பு தரப்பில் அவருக்கு மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுத் தந்து வருகிறது. அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான சூழலில் அவரது அடுத்தப்பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, இவற்றில் எந்தப் படம் முதலில் ரசிகர்களை சந்திக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











