Actor Ajith: வாவ்.. சூப்பர் ஸ்மார்ட் அஜித்.. அசர்பைஜான் சூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் இந்தப் படத்தில் அஜித்தின் போர்ஷன்களை அடுத்த மாத்திற்குள் நிறைவு செய்ய இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டு சூட்டிங்கை விரைவு படுத்தியுள்ளார். மார்ச் மாதத்தில் தனது அடுத்தப்படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை மகிழ் திருமேனி முன்னெடுத்துள்ளார்.

மங்காத்தா படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் திரிஷாவை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக மகிழ் திருமேனி காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து அஜித் ஸ்லிம்மாகியுள்ளார். அவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விடாமுயற்சி சூட்டிங் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மீண்டும் சூட்டிங் துவங்கியுள்ளது.

Actor Ajiths Recent click from Vidaamuyarchi shooting spot in Azerbaijan

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியான நிலையிலும் சூட்டிங் தாமதமானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி நடந்து வருகிறது. அசர்பைஜான், துபாய், சென்னை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் அதிகமான காட்சிகளை அசர்பைஜானிலேயே நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு சூட்டிங்கை நடத்தி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கம்: படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், படத்தில் அஜித், அர்ஜூன் காம்பினேஷனில் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மகிழ் திருமேனியின் முந்தைய படங்களை போலவே, இந்தப் படமும் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. முன்னதாக அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்து வெளியான மகிழ்திருமேனியின் தடம், தடையற தாக்க போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அஜித்துடன் அவர் இணைந்துள்ள இந்தப் படமும் மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் துவங்கிய சூட்டிங்: இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில் அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அதிகமான ஷேரிங்கையும் பெற்று வருகிறது. இந்தப் புகைப்படத்தில் ஸ்டைலாக கூலர்ஸ் போட்டுக் கொண்டு அஜித் காணப்படுகிறார். தற்போது தன்னுடைய பிட்னசில் மிகவும் அக்கறை காட்டி வருகிறார் அஜித். உடல் பருமனாக காணப்பட்ட அவர் தற்போது ஸ்லிம்மாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்களிலும் அவர் அதிகமாக கவனம் காட்டி வருவதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஸ்டைலிஷ் அஜித்: முன்னதாக பில்லா படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலாக காணப்படுவார். அதேபோல விடாமுயற்சி படத்திலும் அவரை சிறப்பாக காட்ட மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அசர்பைஜான் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தப்படும் என்று தெரிகிறது. படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்படும்நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X