Actor Ajith: அஜித் ரீசண்ட் கிளிக்.. க்யூட் சிரிப்பில் மயங்கிப்போன ரசிகர்கள்!

ஐதராபாத்: நடிகர் அஜித் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்து வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டு ஜனவரியில் அவரது துணிவு படம் ரிலீசான நிலையில் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்திலேயே வெளியான சூழலில் விடாமுயற்சி படத்தின் சூட்டின் தொடர்ந்து தள்ளிப் போவது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

இதனிடையே அந்த படத்திற்காக காத்திருக்காமல் ஆதிக் ரவிச்சந்திரனுடன் குட் பேட் அக்லி என்ற அடுத்த படத்தில் இணைந்துள்ளார் அஜித். இந்த படத்தில் அவர் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தற்போது நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Actor Ajith s recent click in Good bad ugly movie shooting spot

நடிகர் அஜித்: அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்து சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சூழலில் படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சில தினங்களில் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் துவங்கி நடத்தி வருகின்றனர். இந்த ஷெட்யூலை நிறைவு செய்துவிட்டு அஜித் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படம்: மீண்டும் அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ள சூழலில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் அஜித்துடன் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் சூட்டிங் துவங்கிய உடனே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித் ரீசண்ட் கிளிக்: தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் அஜித், அங்கு ரசிகருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மூன்று கெட்டப்புகளில் அஜித்: தற்போது உடலை ஸ்லிம்மாக்கி அழகாக மாறியுள்ளார் அஜித். அவரது நடிப்பில் மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் குட் பேட் அக்லி படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு கெட்டப்பில் அவர் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலும் மற்றொரு கெட்டப்பில் குடுமி போட்டபடியும் இன்னொரு கெட்டப்பில் இளமையான தோற்றத்துடனும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருடன் ஜோடியாக மீனா, சிம்ரன் அல்லது நயன்தாரா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X